யார் இந்த மருதுகணேஷ் - வழக்கறிஞர், பத்திரிகையாளர், திமுக வேட்பாளரான கதை

Asianet News Tamil  
Published : Mar 15, 2017, 11:31 AM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
யார் இந்த மருதுகணேஷ் - வழக்கறிஞர், பத்திரிகையாளர், திமுக வேட்பாளரான கதை

சுருக்கம்

Who marudhuganesh lawyer journalist DMK candidate Story

ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அனைத்து கட்சிகளும் சுறுசுறுப்படைந்தது.
கடந்த 2 நாட்களுக்கு தேமுதிக சார்பில் ஆர்கே நகர் வேட்பாளராக மதிவாணன் அறிவிக்கப்பட்டார். ஆனால், திமுக மற்றும் அதிமுகவில் வேட்பாளர் தேர்வு இழுப்பறியாக இருந்தது.


இதைதொடர்ந்து இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆட்சி மன்ற குழு கூட்டம் நடந்தது. இதில், டி.டி.வி.தினகரனை ஆர்.கே. நகர் தொகுதி வேட்பாளராக அறிவித்தனர்.
இந்நிலையில், திமுக வேட்பாளராக என்.மருதுகணேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை பற்றிய சில தகவல்கள்.
மருதுகணேஷ், சென்னை சவுகார்பேட்டையில் உள்ள குருசாமி முதலியார் தொண்ட மண்டல துருவ வேளாளர் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு வரை படித்தார்.


பின்னர், திருவொற்றியூர் நெடுஞ்சாலை வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள சர் தியாகராயா கல்லூரியில் பி.காம் முடித்துவிட்டு, பாரிமுனை அம்பேத்கர் சட்ட கல்லூரியில் பி.எல். முடித்தார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள என்.மருதுகணேஷின் தாய் பார்வதி நாராயணசாமி. இவரும் மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளராகவும், திமுக கவுன்சிலராகவும், பொதுக் குழு உறுப்பினராகவும் இருந்தார். இவரை தொடர்ந்து மருதுகணேஷ், திமுகவில் தொடர்ந்து கட்சி பணிகளை செய்து வந்தார்.


கல்லூரி காலத்திலேயே திமுக சார்பில் பல்வேறு போராட்டங்கள், கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டனர். இதன் மூலம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பொது செயலாளர் க.அன்பழகன் ஆகியோருடன் நெருக்கம் ஏற்பட்டது.
இதைதொடர்ந்து ஆர்கே நகர் பகுதியில் 2 முறை வட்ட செயலாளராக இருந்தார். கடந்த முறை திமுகவில் பகுதி செயலாளருக்கு போட்டியிட்டார். ஆனால், சுந்தர்ராஜன் என்பவருக்கு பதவி வழங்கப்பட்டது.


அதில், அவரது கட்சி பணிகளில், திமுகவின் மேலிடத்துக்கு திருப்தி ஏற்படவில்லை. இதையடுத்து மருதுகணேஷ், திமுக பகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
கல்லூரி படிப்பை முடித்த மருதுகணேஷ், காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை மு.க.ஸ்டாலின், க.அன்பழகன் ஆகியோர் தலைமையேற்று நடத்தினர்.


இதையொட்டி கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் நடந்தது. அப்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவுக்கு, திமுக சார்பில் எதிராக சிம்லா முத்து சோழன் போட்டியிட்டார். அவருடன், தொகுதி முழுவதும் மக்களை சந்தித்து, தீவிர வாக்கு சேகரித்தார்.
இந்த தேர்தலில், ஜெயலலிதா 97,218 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்து சோழன் 57,673 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். இதில், 39,545 வாக்குகள் வித்தியாசம். மற்ற கட்சியினர் டெபாசிட் இழந்தன.
இதன்மூலம், சிம்லா முத்துசோழனின் வெற்றிக்காக மருதுகணேஷ், கட்சி பணிகளில் ஈடுபட்டார். இதையொட்டி, ஆர்.கே. நகர் இடை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள இவர், முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருதுகணேஷ், ஒரு பத்திரிகையில் நிருபராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

CM Vijay: தேம்பி அழ வேண்டாம்..! உதயநிதியின் ஒவ்வொரு கருத்துக்கும் தரமான பதிலடி கொடுத்த CM விஜய்..
AIADMK Split 2026: இபிஎஸ் vs எஸ்.பி வேலுமணி.! மீண்டும் பிளவுபட்ட அதிமுக.! கட்சி இனி யார் வசம் செல்லும்?