புதுமுகம் மருதுகணேஷை களத்தில் இறக்கியது திமுக - தாக்கு பிடிப்பாரா ஸ்டாலின் வேட்பாளர்

Asianet News Tamil  
Published : Mar 15, 2017, 10:50 AM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
புதுமுகம் மருதுகணேஷை களத்தில் இறக்கியது திமுக - தாக்கு பிடிப்பாரா ஸ்டாலின் வேட்பாளர்

சுருக்கம்

The new comer in the field and unloaded DMK marudhuganesh

ஆர்.கே. நகர் இடை தேர்தலில் திமுக சார்பில் என்.மருதுகணேஷ் போட்டியிடுவார் என பேராசிரியர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
அதிமுக வேட்பாளராக டி.டி.வி.தினகரனை, களத்தில் இறக்கியுள்ள நிலையில், சிம்லா முத்துசோழன், ஆர்.டி.சேகர், கிரிராஜன் உள்ளிட்டோரில் ஒருவர் களம் இறங்குவார்கள் என எதிர் பார்க்கப்பட்டது.
ஆனால், அனைவரின் எதிர்பார்ப்பையும் பொய்ப்பிக்கும் வகையில் ஆர்.கே. நகர் பகுதி செயலாளரான என்.மருதுகணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.


இவர், தன் தொகுதி மக்க்ள் இடையே நல்ல பரிட்சயம் ஆனவர் என்பதும், சிம்லா முத்து சோழன் போட்டியிட்டபோது அதிக வாக்குகள் திமுகவுக்கு வாங்கி கொடுத்தவர் என்பதும் கவனிக்கப்பட வேண்டியதாகும்.
வேறு தொகுதியில் இருந்து ஒருவர் வந்து நிற்பதை விட, உள்ளூர் நபரையே வேட்பாளராக நிறுத்துவதால், அவருக்கு ஆதரவு கூடும் என கருதுகிறது தி.மு.க. தற்போது நிலவரப்படி, அதிமுகவின் டிடிவி தினகரன், திமுகவின் மருதுகணேஷ், தேமுதிகவின் மதிவாணன் ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்னும், ஓ.பி.எஸ். அணியில் மதுசூதுனனா..? தீபா அணியில் தீபாவா..? பாஜகவில் கங்கை அமரனா...? மக்கள் நலக் கூட்டணி தேர்தலில் நிற்குமா என்ற கேள்விகளுக்கும், இன்றோ அல்லது நாளைக்குள் பதில் தெரிந்துவிடும்.

PREV
click me!

Recommended Stories

TVK Government : இவருக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி கவிழுமாம்! யார் தெரியுமா?
Jana Nayagan: ஜனநாயகன் படத்தை சரசரவென வெட்டித்தள்ளிய சென்சார்.?! நீக்கப்பட்ட 12 முக்கிய காட்சிகள் என்னென்ன?