உதயாவை எதிர்த்து யாரு நின்னாலும், அவங்க டெபாசிட் காலியாகணும்! பக்கா ஸ்கெட்ச் போட்ட செயல் தல...

Asianet News Tamil  
Published : Jun 05, 2018, 12:14 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
உதயாவை எதிர்த்து  யாரு நின்னாலும், அவங்க டெபாசிட் காலியாகணும்! பக்கா ஸ்கெட்ச் போட்ட செயல் தல...

சுருக்கம்

DMK as Udhayanidhi says he is ready

திமுகவில் உதயநிதிக்கான முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. திமுகவில் நடக்கும் எல்லா நல்லது கெட்டதுகளிலும் உதயநிதி முன் வரிசையில் இருக்கிறார். இதிலிருந்தே உதயநிதியின் அரசியல் பயணம் கிட்டத்தட்ட பக்கா ப்ளானோடு ரெடியாகிவிட்டது.

தலைவர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்துக்கு திருவாரூக்குப் போய்விட்டு வந்ததிலிருந்து உதயாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த யோசிக்க ப்ளான் போட்டுவிட்டார் செயல் தல.

ஆமாம், ‘சட்டமன்றத் தேர்தல் எப்போ வரும்னு தெரியாது. ஆனால், எப்போ எலக்ஷன் வந்தாலும் அதுக்கு நாம ரெடியா இருக்கணும். எப்படியும் இந்த முறை தேர்தலில் உதயாவை நிறுத்தியே ஆகணும். அதுக்கு நான் யோசிச்சது என்ன தெரியுமா...? அப்பா பிறந்த நம்மளோட பூர்வீகமான திருவாரூரில் உதயாவை களத்தில் இறக்கலாம். அதுக்கான வேலைகளை இப்போ இருந்தே ஸ்டார்ட் பண்ணிடலாம். திருவாரூரில் உதயாவை யாரு எதிர்த்து  வந்தாலும், அவங்க டெபாசிட் காலியாகணும் குறிப்பா நோட்டாவை விட கீழ இருக்கணும். அந்த அளவுக்கு உதயா வெற்றி ஸ்டிராங்கா இருக்கணும் என சொன்னாராம்.

இதற்காக, ரசிகர் மன்ற நிர்வாகிகள் தொடங்கி, கட்சியின் பொறுப்பாளர்கள் வரை எல்லோரையும் திருவாரூக்கு அனுப்பி இப்போலேருந்தே அடித்தளத்தை அமைக்கச் சொல்லுவோம். ஒவ்வொரு வார்டிலும் இருக்கும் வாக்காளர்களைப் பேர் சொல்லி கூப்பிடும் அளவுக்கு நெருக்கமாகிக்கணும். உதயாவையும் மாசத்துக்கு ஒரு தடவை திருவாரூர் போகச் சொல்லிடுறேன். இதுக்கான வேலைகளை இப்போதே ஸ்டார்ட் பண்ணிடுங்க..’ என உதயாவின் நெருங்கிய தோழன் மகேஷிடம் சொல்லியிருக்கிறார் செயல் தல.

திருவாரூர் தொகுதி இப்போது தலைவர் தொகுதி. இங்கே நிற்க வேண்டும் என்று அவருக்கு அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் இருந்தே ஆசை இருந்தது. ஆனா, அது அப்போ ரிசர்வ் தொகுதியாக இருந்ததால் தலைவரால் நிற்க  முடியாமல் போனது. 2011 சட்டமன்றத் தேர்தலின்போது மறுசீரமைப்பில் திருவாரூர் தொகுதி பொதுத் தொகுதியாக அறிவிக்கப்பட்ட பின்னர்தான், கருணாநிதி அங்கே நின்றார்.

2011, 2016 இரு தேர்தல்களிலும் திருவாரூர் தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இப்படிப்பட்ட பெருமை மிக்க திருவாரூர் தொகுதியைத்தான் தன் மகனுக்கான தொகுதியாக மாற்ற முடிவு செய்திருக்கிறார் செயல் தல.

PREV
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
தவெக-வில் நடிகர் கவுண்டமணி..? ஐயோ ராமா... விஜய்க்காக இந்த முடிவை எடுத்தாரா..?