எங்களுக்கு 16 தொகுதி வேண்டும் – காங்கிரஸ் !! பாதிக்கு பாதி தான் முறுக்கும் திமுக !! ராகுல் - கனிமொழி இறுதிக்கட்ட பேச்சு !!

By Selvanayagam PFirst Published Feb 19, 2019, 9:36 AM IST
Highlights

திமுக -  காங்கிரஸ் கட்சிகளிடையே நடைபெற்ற தேர்தல் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் தங்களுக்கு 16 இடங்கள் வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி டிமாண்ட் பண்ணும் நிலையில் 8 இடங்கள் மட்டுமே தர முடிவும் என திமுக இறுதியாக பதில் சொல்லியுள்ளது. இது தொடர்பாக ராகுல் – கனிமொழி இடையே பேச்சு வார்த்தை நடைபெற்ற நிலையில் இன்றும் மீண்டும் பேச்சு நடக்க உள்ளது.
 

தி.மு.க., சார்பில் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த டெல்லி வந்த கனிமொழி எம்.பி., தி.மு.க., முதன்மை செயலர், டி.ஆர்.பாலு ஆகியோர்  காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மிகவும் ரகசியமான, உயர்மட்ட ஆலோசனைகளையும், வியூகங்களையும் மேற்கொள்வதற்கு என்றே, காங்கிரஸ் மேலிடம், டில்லி, ரஹாப் கஞ்ச் சாலையில், தனி அலுவலகம் வைத்துள்ளது. 

அங்கு நடந்த பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் தரப்பில், மூத்த தலைவர்கள், அகமது படேல், குலாம்நபி ஆசாத், சிதம்பரம்; தி.மு.க., தரப்பில், கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்றனர். அவர்களுடன், தமிழக காங்கிரஸ் தலைவர், அழகிரியும் பங்கேற்றார்.

கூட்டணிக்குள், இன்னும் சில கட்சிகள் வரவுள்ளன. அவர்களுக்கும், தொகுதிகள் ஒதுக்க வேண்டியுள்ளது. எனவே, அதிகபட்சமாக, ஏழு அல்லது எட்டு  தொகுதிகள் மட்டும் தர முடியும். என  தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

முதல் நாள் பேச்சுவார்த்தை விபரங்களை, சென்னைக்கு தெரிவித்த, டி.ஆர்.பாலு, மறு நாளான ஞாயிறு அன்றும், டில்லியில் தான் இருந்தார். அப்போது, அவர், தி.மு.க., தலைமையிடம் இருந்து வந்த, சில தகவல்களை, காங்கிரஸ் மேலிடத்திடம் நேரில் தெரிவித்துவிட்டு, அன்றிரவு, சென்னை திரும்பி விட்டார். 


இந்நிலையில் நேற்று தொகுதி பங்கீடு குறித்து ராகுல் – கனிமொழி இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது ஏற்கனவே காங்கிரஸ் குழுவிடம் பேசியதை கனிமொழி வலியுறுத்தினார். ஆனால் ராகுல் காந்தி இதனை ஏற்றுக் கொள்ளாமல் இரட்டை இலக்கத்துடன் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதனிடையே இன்று மீண்டும் ராகுல் காந்தி –கனிமொழி இடையே  பேச்சுவார்த்தை  நடைபெறவுள்ளது. இதையடுத்து இன்று தொகுதிப் பங்கீடு குறித்து, இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

click me!