பிரதமர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் …..150 நாட்களில் 12 லட்சம் பேருக்கு சிகிச்சை !! அசத்தும் மோடி !!

Published : Feb 19, 2019, 08:12 AM IST
பிரதமர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் …..150 நாட்களில் 12 லட்சம் பேருக்கு சிகிச்சை !! அசத்தும் மோடி !!

சுருக்கம்

பிரதமர் மோடியின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டு 150 நாட்களில் 12 லட்சத்துக்கு மேற்பட்டோர்  சிகிச்சை பெற்றுள்ளதாக சுகாராத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றதும் பல கவர்ச்சிகரமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேக் இன் இண்டியா, சுவிட்ச் பாரத் போன்ற திட்டங்கள் நாமு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில்தான் பிரதமரின் புதிய  மருத்துவ காப்பீடு திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 23-ந்தேதி தொடங்கப்பட்டது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இதில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வீதம் ரூ 10.74 கோடி   ஏழை குடும்பங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டது.

இதற்காக இதுவரை 1.7 கோடி பயனாளர்கள் அட்டை அச்சடிக்கப்பட்டுள்ளது. 14,856 மருத்துவமனைகளில் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் தொடங்கப்பட்டு 150 நாட்களுக்குள் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ள இத்திட்டம் ஏழை-எளிய மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தொடர்ந்து இத்திட்டத்தை விரிவு படுத்தவும் மத்திய சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!