சூடு பிடிக்கும் தேர்தல்! போட்டி போட்டு களத்தில் இறங்கும் திமுக-அதிமுக.! தேர்தல் அறிக்கையில் வெல்லப்போவது யார்?

By Ajmal KhanFirst Published Feb 5, 2024, 9:49 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்களிடம் வாக்குகளை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட திமுக மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளது. அந்த வகையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களின் கருத்துகளை கேட்க களம் இறங்கியுள்ளது.

தேர்தல் அறிக்கை- தமிழகம் முழுவதும் பயணம்

நாடாளுமன்ற தேர்தல் தேதி இந்த மாதம் இறுதியில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கங்கள், மீனவ பிரதிநிதிகள், தொழில் முனைவோர், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்கவுள்ளது. இந்தநிலையில் திமுகவில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை.! டாஸ்மாக் கடை மூடப்படும்- அண்ணாமலை

கருத்துகளை தெரிவிக்க முகவரி அறிவிப்பு

தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து  ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் - DMKManifesto2024’ என்ற தலைப்பில் பரிந்துரைகளை அனுப்ப கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் தேர்தல் அறிக்கையை வடிவமைப்பதற்கான கோரிக்கைகளை அனுப்பி வைத்து தேர்தல் அறிக்கை தயாரிப்பில் மக்கள் பங்களிக்கும் வகையில் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிப்பதற்கு, தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, அண்ணா அறிவாலயம், எண் 367/369, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600018 என்ற முகவரிக்கு கடிதங்கள் மூலமாகவோ அல்லது dmkmanifesto2024@dmk.in-இற்கு மின்னஞ்சல் முகவரி அளிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி எண் மூலம் பகிர்வதற்காக 08069556900 -இல் ஒரு சிறப்பு ஹாட்லைன் அமைக்கப்பட்டுள்ளது.

நேரடியாக களத்தில் இறங்கும் திமுக

இது மட்டுமில்லாமல், தமிழ்நாடு முழுவதும் தேர்தல் அறிக்கைக் குழு டவுன் ஹால் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. இன்று முதல் (05.02.24) குழுவின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு, கருத்துகளை நேரில் பெறுகின்றனர். இன்று தூத்துக்குடியில் கருத்துகளை கேட்கும் குழுவினர், அடுத்ததாக விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி. மதுரை, தஞ்சை, சேலம், கோவை என பல மாவட்டங்களுக்கு செல்லும் இந்த குழு சென்னையில் வருகிற 21 முதல் 23 ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. 

போட்டி போடும் அதிமுக

இதே போல அதிமுக சார்பாக தேர்தல் அறிக்கை தொடர்பாக  பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி விவசாயிகள், வெளிநாடு வாழ் தமிழர்கள் முதல்  அனைத்து தரப்பினரும் கொரியர் மூலமாகவோ அல்லது இமெயில் மூலமாகவோ அதிமுக தலைமை கழகத்திற்கு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மேலும் இன்று முதல்  தமிழகம் முழுவதும் 9 மண்டலங்களில் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நேரில் சென்று விவரங்களை சேகரிக்கவுள்ளது. இதனை தொடர்ந்து இந்த மாதம் இறுதி அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்

இமாச்சலில் சட்லஜ் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து: சைதை துரைசாமி மகன் மாயம்

click me!