ஒரே அறையில் அம்ர்ந்து திமுக, அதிமுக தலைவர்கள் ஜாலியான பேச்சு !!  மிளிரும் அரசியல் நாகரீகம் !!!

Asianet News Tamil  
Published : Dec 18, 2017, 09:38 AM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
ஒரே அறையில் அம்ர்ந்து திமுக, அதிமுக தலைவர்கள் ஜாலியான பேச்சு !!  மிளிரும் அரசியல் நாகரீகம் !!!

சுருக்கம்

dmk and admk leaders in one room and speake

ஒரே அறையில் அம்ர்ந்து திமுக, அதிமுக தலைவர்கள் ஜாலியான பேச்சு !!  மிளிரும் அரசியல் நாகரீகம் !!!

சென்னை தலைமை செயலகத்தில் ஒரே அறையில் உட்காந்திருந்த திமுகசெயல் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர், அருகில் அமர்ந்திருந்த துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்டோர் நலம் விசாரத்துக் கொண்டதுடன் கிண்டலாக பேசி சிரித்துக்கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவது தொடர்பாக, தலைமை சிறப்பு தேர்தல் அதிகாரியான விக்ரம் பாத்ராவிடம் புகார் அளிப்பதற்காக நேற்று அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தலைமைச் செயலகம் வந்திருந்தனர்.

ஒவ்வொரு கட்சி நிர்வாகிகளையும் தனித்தனியாக அழைத்து தலைமை சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பாத்ரா பேசினார். அப்போது, மற்ற கட்சியை சேர்ந்த தலைவர்கள் அருகில் உள்ள அறையில் அமர்ந்திருந்தனர்.

பா.ஜ.க. நிர்வாகிகளிடம் தலைமை சிறப்பு தேர்தல் அதிகாரி பேசிக்கொண்டிருந்தபோது, அறையில் அ.தி.மு.க.வை சேர்ந்த நாடாமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

அந்த நேரத்தில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் ஆகியோர் அறைக்குள் வந்தனர். மு.க.ஸ்டாலினை பார்த்ததும், தம்பிதுரை உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் எழுந்து நின்றனர். ஒருவரை ஒருவர் பார்த்து புன்சிரிப்பை உதிர்த்தனர்.

பின்னர், அமைதியாக ஒவ்வொருவரும் இருக்கையில் அமர்ந்தனர். சற்று நேரம் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் சாப்பிட முந்திரி பக்கோடா, பால்கோவா வழங்கப்பட்டது. ஆனால், யாரும் அதை ஆர்வமாக சாப்பிடவில்லை. சற்று நேரத்தில், துரைமுருகன் பேச்சை தொடங்கினார். அவர் மனோஜ் பாண்டியனிடம், அப்பா பி.எச்.பாண்டியன்,  எப்படி இருக்கிறார்?. அவருக்கு ‘சுகர்’ அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என கேட்டார்.

அதற்கு பதில் அளித்த மனோஜ் பாண்டியன், அவர் நன்றாக இருப்பதாக கூறினார்.

இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயகுமார், தேர்தல் அதிகாரியிடம் என்ன புகார் கொடுக்க வந்தீங்க?. அதை என்னிடம் சொன்னால், நானே பதில் கூறிவிடுகிறேன் என துரைமுருகனிடம் கேட்டார். அதற்கு நமுட்டுச் சிரிப்பை துரை முரகன் உதிர்த்தபோது, ஸ்டாலின் பேச்சைத் தொடங்கினார்

நீங்கள் செய்த தவறுகளை ஆதாரத்துடன் எடுத்து வந்துள்ளோம். அதனை தலைமை சிறப்பு தேர்தல் அதிகாரியிடம் தான் வழங்குவோம். இங்கு விவாதிக்க முடியாது என்று கூறி சிரித்தார்..

பின்னர் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் , துரைமுருகனை பார்த்து,உங்களுக்கு ‘சுகர்’ எவ்வளவு இருக்கிறது? என  கேட்டார்.

அதற்கு துரைமுருகன் சாப்பிடுவதற்கு முன்பாக 115 இருக்கிறது. சாப்பாட்டுக்கு மேல் 125, 130 என்ற அளவில் இருக்கிறது என கூறினார்.

இதையடுத்து பேசிய துரைமுருகன் , தம்பிதுரையிடம்  நீங்க... உங்க ஊரில் மாதம் தோறும் ஊர் மக்களுக்கு சாப்பாடு போடுவீங்களே? இப்போதும் சாப்பாடு போடுகிறீர்களா?. என கேட்டார்.

அதற்கு தம்பிதுரைஆமாம், அது ஆண்டாண்டு காலமாக தொடர்ச்சியாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை என கூறினார்..

இப்படி அவர்கள் அனைவரும் ஜாலியாக பேசிக்கொண்டிருந்போது அ.தி.மு.க. நிர்வாகிகளை தேர்தல் அதிகாரி அழைத்ததையடுத்து அ.தி.மு.க.வினர் எழுந்து செல்ல முயன்றனர்.

அப்போது துரைமுருகன், அதிகாரியை சந்திப்பதிலும் ஆளும் கட்சிக்கு தான் முன்னுரிமையா?’’ என்று கேள்வி எழுப்ப,  அனைவரும் சிரித்தனர்.

PREV
click me!

Recommended Stories

ஒருத்தர்கூட மிஸ்ஸாகி விட கூடாது.. அதிமுக மா.செ.க்களுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த இபிஎஸ்..!
இந்தியா- பாகிஸ்தான் போரை நிறுத்தியதே நாங்கதான்..! உலகத்துக்கே நாட்டாமையாக கொக்கரிக்கும் சீனா..!