குஜராத்தில் திடீர் திருப்பம் !! பாஜகவை  பின்னுக்குத் தள்ளி காங்கிரஸ் முன்னிலை! #GujaratVerdict #GujaratResults  #GujaratElection2017

First Published Dec 18, 2017, 9:23 AM IST
Highlights
Gujarat congress party lead


குஜராத்    மாநிலத்தில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. 22 ஆண்டகளாக பாஜக ஆட்சியில் இருந்த அம்மாநிலத்தில் பாஜகவை பின்னுக்குத் தள்ளி  காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.

குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தல்களில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. தொடக்கத்தில் இரு மாநிலங்களிலும் பாஜக  முன்னிலை வகித்தது. தற்போது அங்கு காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது..

கடந்த, 2014 நாடாளுமன்றத்  தேர்தலில், பாஜக  தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, நரேந்திர மோடி, பிரதமர் பதவியை ஏற்றார். அதன்பின், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தல்களில், பெரும்பாலானவற்றில், பாஜகவே வெற்றி பெற்று வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ்  ஆட்சியில் உள்ள, இமாச்சலப் பிரதேசத்திலும், பா.ஜ., ஆட்சியில் உள்ள குஜராத்திலும், சமீபத்தில் சட்டசபைத் தேர்தல்கள் நடந்தன. இவற்றில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி, இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. முதல்கட்டமாக இரு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை வகித்தது. 

ஆனால் போகக்போக பாஜகவை பின்னுக்குத் தள்ளி காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 86 இடங்களிலும், பாஜக 77 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த தேர்தல் முன்னிலை குறித்த தகவலால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இமாச்சல பிரதேசத்தில் 36 தொகுதிகளில் பாஜகவும், 22 தொகுதிகளில் காங்கிரசும் முன்னிலை வகிக்கின்றன. இங்கு காங்கிரஸ் தனது ஆட்சியை இழக்கிறது.

click me!