ஊழலின் தூதர் திமுக - பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் காட்டம் 

Asianet News Tamil  
Published : Dec 24, 2016, 08:21 PM ISTUpdated : Sep 19, 2018, 02:53 AM IST
ஊழலின் தூதர் திமுக - பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் காட்டம் 

சுருக்கம்


பி.ஜே.பி. இளைஞர் அணியின் மாநில செயல்வீரர்கள் கூட்டம் கோவையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பி.ஜே.பி. தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ், தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 
கூட்டத்தில் முரளிதர ராவ் பேசியதாவது. ஒட்டு மொத்த இந்தியாவும் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய பி.ஜே.பி. முயற்சித்து வருகிறது. இந்த நேரத்தில் தமிழகத்தின் தலைமைச் செயலாளர் மட்டும் இன்னும் பணமாகவே வைத்திருக்கிறார்.
 தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள கிரிஜா டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான வகுப்புகளை எடுக்க நான் பரிந்துரைக்கிறேன்.
தமிழகத்தில் நிலவும் சூழலை பயன்படுத்தி தி.மு.க. ஆட்சிக்கு  வந்து விடலாம் என நினைக்கிறது. தி.மு.க. ஊழலின் தூதராக இருக்கிறது. தி.மு.க.வின் கனவு பலிக்காது. இனி தமிழகத்தில் யாரும் ஊழல் செய்ய முடியாது. 
விரைவில் தமிழகத்தில் பி.ஜே.பி. அதிக சக்தியுடன் வர இருக்கிறது. மத்தியிலும், தமிழகத்திலும் இனி பி.ஜே.பி. தான்," என கோவையில் பி.ஜே.பி. தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் பேசினார்.

PREV
click me!

Recommended Stories

TVK vs Congress: காங்கிரஸ் எச்சரித்தும் கேட்காத தவெக! விஜய் பிரதமர் விவகாரத்தில் கூட்டணி விரிசலா?
DA Hike: அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு! சட்டசபையில் வெளியான சூப்பர் அறிவிப்பு