எது சரியோ அதை செய்யுங்கள் - அதிகாரிகளுக்கு ஆணையிட்ட எம்ஜிஆர்

 
Published : Dec 24, 2016, 04:31 PM ISTUpdated : Sep 19, 2018, 02:53 AM IST
எது சரியோ அதை செய்யுங்கள் - அதிகாரிகளுக்கு ஆணையிட்ட எம்ஜிஆர்

சுருக்கம்

எம்ஜிஆர் முதல்வரான பின்னர் தானாக முடிவுகள் எடுக்காமல் அதிகாரிகளிடம் உங்களுக்கு மக்களுக்கு நல்லது என்னவென்று செய்ய தெரியும் அதை செய்யுங்கள் என கட்டளையிட்டாராம். 

எம்ஜிஆர்  1977 ல்  முதலமைச்சர் ஆனார். முதல்வர் அலுவலக்ததில் கோப்புகளை பாஅர்த்துகொண்டிருந்தாராம்.  அப்போது அவரது அலுவலகத்துக்கு ஒரு கோப்பு அனுப்பப்பட்டது. எம்ஜிஆர்   அந்த கோப்பை படித்துவிட்டு கோப்பில் "எது சரியோ அதை செய்யுங்கள்" என்று ஒரு துண்டு சீட்டில் எழுதி அனுப்பிவிட்டாராம்.

கோப்பை அனுப்பிய அதிகாரிக்கு  ஒன்றும் புரியவில்லை. சரி முதல்வரிடமே கேட்போம் என்று எம்ஜிஆர் அலுவலக அறைக்குள் சென்று  ஐயா கோப்பில் என்று இழுத்துள்ளார், அதற்கு எம்ஜிஆர் ஆமாம் "எது சரியோ அதை செய்யுங்கள்" என்று எழுதியிருக்கிறேன் அதை செய்யுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

நீங்கள் சொல்லுவதை கேட்டு நடப்பது தான் எங்கள் வேலை என்று அந்த அதிகாரி சொல்ல. இதோ பாருங்கள் இந்த "முதலமைச்சர்" நிர்வாகம் எனக்கு புதியது. எனவேதான் நான் அப்படி "எது சரியோ அதை செய்யுங்கள்" எழுதினேன்  , மக்களுக்கு நல்லது நடக்கணும் அதில் கவுரவம் ஒரு பொருட்டல்ல என்று கூறியுள்ளார்.

மலைத்துபோன அந்த அதிகாரி சார் ,  நாங்கள் எதாவது பிரச்சனை அல்லது அரசு திட்டத்துக்கு உங்கள் வழிகாட்டுதல் ஒப்புதல்  தேவை என்றால் உங்களிடம் "எப்படி போனால் எப்படி முடியும்" என்று பல தீர்வுகளை சொல்கிறோம். நீங்கள் யோசித்து உங்களது முடிவை சொல்லுங்கள். அதன்படி நாங்கள் செயல்படுகிறோம் என்றார்.

எம்ஜிஆர் அதற்க்கு "சரி, இனி அப்படியே செய்வோம்" என்று கூறியுள்ளார். "தனக்கு எல்லாம் தெரியும்" என்ற மமதை இல்லாமல் மக்களுக்கு நல்லது நடக்கவேண்டும் எனபதற்காக இறங்கி வந்தவர் எம்ஜிஆர். அவர்தான் எம்ஜிஆர்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு