எம்ஜிஆர் இறுதி நிகழ்ச்சி - வீட்டிலிருந்து கண்கலங்கிய கருணாநிதி

First Published Dec 24, 2016, 4:27 PM IST
Highlights


எம்ஜிஆர் மறைவு செய்தி முதலில் அவரது நண்பர் கருணாநிதிக்குத்தான் சொல்லப்பட்டது. உடனடியாக அதிகாலையில்  ராமாவரம் தோட்டத்துக்கு சென்ற கருணாநிதி அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் தான் தகவல் வெளியானது. அதன் பின்னர் எம்ஜிஆரின் தொண்டர்கள் எம்ஜிஆர் மேல் கொண்ட பற்றை தவறாக எடுத்துகொண்டு அண்ணாசாலையில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி சிலையை தகர்த்து எரிந்தனர். 

கருணாநிதி தனது நண்பருக்கு நேரடியாக இறுதி அஞ்சலி செலுத்த முடியாத சூழ்நிலை. எம்ஜிஆர்  இறுதி ஊர்வலம். கருணாநிதி  தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டு இருந்தார் . அவருடன்  தி.மு.க மாணவர் அணி தலைவர். நாஞ்சில்" கென்னடி உள்ளிட்டோர்  இருந்தனர் .

எம்ஜிஆரை அடக்கம் செய்யும் போது, கருணாநிதி  கண்ணில் இருந்து கண்ணீர் , ஆறாக பெருக பார்த்து கொண்டிருந்தாராம். தன்னுடைய 40 ஆண்டுகால நண்பனுடன் தான் பழகி மகிழ்ந்திருந்த நாட்கள் அவர் மனதில் ஓடியிருக்கும் . அரசியல் களத்தில் எதிர் எதிர் துருவங்களாக இருந்தாலும் எம்ஜிஆரும் ,கருணாநிதியும் ஒருவரை ஒருவர் அவ்வளவு மதித்தார்கள் எனபதற்கு இது சான்று. 

click me!