
எம்ஜிஆருடனும் தாம் கொண்டிருந்த நட்பை பற்றி நம்பியார் மனமுறுகி கூறியுள்ளார்.
எம்ஜிஆருக்கும் தனக்கும் இடையே எந்த மாதிரி நட்பு இருந்தது என்பதை நம்பியாரே ஒருமுறை இப்படிக் குறிப்பிட்டார் ஒரு விருது வழங்கும் விழா மேடையில்.
எனக்கு எம்ஜிஆர் மேல ரொம்பக் கோபம். அவர் இருந்த வரைக்கும் எங்கே போனாலும் எம்ஜிஆர் என்றதும் உடனே மக்கள் நம்பியார் என்றும் சேர்த்தே உச்சரிப்பார்கள். இப்போ அவர் போய்ட்டாரு. மக்கள் என்னை மறந்துட்டாங்க.
போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கலாம் அவர், என்று கூறி மேடையிலேயே கண் கலங்கினார். அந்த விழாவில் தலைமை விருந்தினர் திமுக தலைவர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.