தமிழகத்தில் திமுக கூட்டணிக்கே ஜெயம்.. தெறிக்கவிடும் கருத்துக்கணிப்பு தகவல்...!

Published : Mar 27, 2019, 06:42 AM IST
தமிழகத்தில் திமுக கூட்டணிக்கே ஜெயம்.. தெறிக்கவிடும் கருத்துக்கணிப்பு தகவல்...!

சுருக்கம்

தேசிய அளவில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வென்றாலும் தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணியே  அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சி-வோட்டர் மற்றும் ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனம் இணைந்து, நாடு முழுவதும் 70 ஆயிரம் பேரிடம் கருத்துக்கணிப்புகளை நடத்தியன. இந்தக் கருத்துக்கணிப்பின்படி தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 305 இடங்கள் வரை வெல்லும் எனக் கருத்துக்கணிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் பாஜக தலைமையிலான கூட்டணி பலமாக இருந்தாலும், தமிழகத்தில் இந்தக் கூட்டணி பலவீனமாக இருப்பதாக கருத்துக்கணிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 31 தொகுதிகளில் வெல்லும் எனக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணிக்கு 8 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவு கூறுகிறது.

 
மேலும் தமிழகத்தைப் போல கேரளா, பஞ்சாப், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
 

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி
அமித்ஷாவுடன் பேசியது என்ன? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் விளக்கம்!