சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறுமா? - திமுகவினர் எதிர்பார்ப்பு

Asianet News Tamil  
Published : Mar 20, 2017, 09:59 AM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறுமா? - திமுகவினர் எதிர்பார்ப்பு

சுருக்கம்

dmk against dhanbal in assembly

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவியேற்றார். பின்னர், அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, சசிகலா மற்றும் ஒ.பி.எஸ். என இரு அளிகளாக செயல்பட்டு வருகிறது.

இதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி, கடந்த 16ம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றார். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த 19ம் தேதி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், திமுகவினர் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதனால், அமளி ஏற்பட்டது.

இதையொட்டி மு.க.ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அவை காவலர்களால் வெளியேற்றப்பட்டார். அப்போது, மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கவர்னர், பிரதமர், குடியரசு தலைவர் ஆகியோருக்கு புகார் மனு கொடுக்கப்பட்டது. மேலும், இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் திமுகவினர் வழக்கு தொடர்ந்தனர்.

இதற்கிடையில், சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என சட்டமன்ற செயலாளரிடம், புகார் மனு கொடுத்தனர்.

இதுபற்றி கடந்த 16ம் தேதி பட்ஜெட் கூட்ட தொடர் நடந்தபோது, மு.க.ஸ்டாலின் கூறினார். அதற்கு, சபாநாயகர் தனபால், “இன்னும் 5 நாட்களுக்கு சட்டமன்றம் நடக்கும். அப்போது, என் மீது கொடுத்த நம்பிக்கை இல்லா தீர்மானம் நடத்தலம். நான் ஒத்துழைப்பு தருகிறேன் என கூறினார்.

இந்நிலையில், இன்று சட்டமன்ற பட்ஜெட் குறித்த விவாதம் தொடங்குகிறது. அப்போது, எதிர்க்கட்சியினர் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எங்கே? நீதிமன்ற படியேறிய காங்கிரஸ் தலைவர் பிரபு!
அதிமேதாவிகளுக்கு பதில் சொல்ல முடியாது.. ஒரேடியாக முடிச்சு விட்ட ப.சிதம்பரம்! கதர் கட்சியில் கலகம்!