மேடையில் முன்வரிசையில் இடம்... உருவாக்கப்படும் அடுத்த வாரிசு.. விரைவில் முக்கிய பதவி..!

By Selva KathirFirst Published Sep 16, 2019, 10:27 AM IST
Highlights

தேமுதிக மாநாடுகளை பொறுத்தவரை விஜயகாந்துக்கு தான் எப்போதும் முன் உரிமை கொடுக்கப்படும். அவரது மனைவி என்ற வகையில் கடந்த காலங்களில் மேடையில் முதல் வரிசையில் பிரேமலதாவுக்கு இடம் வழங்கப்படும். கட்சியில் எந்த பதவியிலும் இல்லாத நிலையிலும் பிரேமலதாவுக்கு மேடைகளில் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வந்தது.

மேடையில் முன்வரிசையில் இடம் கொடுக்கப்பட்ட நிலையில் விரைவில் புதிய பதவியும் விஜயபிரபாகரனுக்கு வழங்கப்பட உள்ளது.

தேமுதிக மாநாடுகளை பொறுத்தவரை விஜயகாந்துக்கு தான் எப்போதும் முன் உரிமை கொடுக்கப்படும். அவரது மனைவி என்ற வகையில் கடந்த காலங்களில் மேடையில் முதல் வரிசையில் பிரேமலதாவுக்கு இடம் வழங்கப்படும். கட்சியில் எந்த பதவியிலும் இல்லாத நிலையிலும் பிரேமலதாவுக்கு மேடைகளில் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வந்தது. 

பிறகு தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நிலை சரியில்லாமல் சென்ற பிறகு அக்கட்சியின் பொருளாளராக பிரேமலதா நியமிக்கப்பட்டார். ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன்கள் விஜயபிரபாகரன், சண்முகபாண்டியன் போன்றோர் கட்சி நிகழ்ச்சிகளுக்கு வந்தாலும் கூட மேடைகளில் ஏற்றப்படுவது இல்லை. மாநாடுகளை அவர்கள் கேரவேனில் அமர்ந்து பார்ப்பது வழக்கம். ஆனால் விஜயகாந்த் உடல் நிலை மோசமான பிறகு அவரது மூத்த மகன் விஜயபிரபாகரன் தீவிர அரசியலில் களம் இறங்கினார். 

தற்போது வரை அவருக்கு எந்த பதவியும் கொடுக்கப்படவில்லை. தேமுதிகவின் இளைஞர் அணிச் செயலாளராக எல்.கே.சுதீஷ் இருந்து வருகிறார். கட்சி ஆரம்பித்தது முதல் அந்த பதவியில் அவர் இருக்கிறார். பிரேமலதாவின் சகோதரரான சுதீஷிடம் இருந்து அந்த பதவி விஜயபிரபாகரனுக்கு கொடுக்கப்படலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுதீசுக்கு தேமதிக துணைச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தான் திருப்பூர் மாநாட்டில் விஜயபிரபாகரனுக்கு மேடையின் முன்வரிசையில் இடம் கொடுக்கப்பட்டது. பொருளாளர் பிரேமலதாவிற்கு அடுத்த சீட் அவருக்கு கொடுக்கப்பட்டது. மேலும் மேடையிலும் விஜயபிரபாகரன் அரசியல் பேச்சில் அதிர வைத்தார். இந்த நிலையில் மேடையில் முன்னுரிமை அளிக்கப்பட்டதை தொடர்ந்து விரைவில் அவருக்கு கட்சிப் பதவி காத்திருக்கிறது என்கிறார்கள்.

சுதீஷ் வசம் இருக்கும் இளைஞர் அணிச் செயலாளர் பதவி விஜயபிரபாகரனுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.சுதீஷ் தேமுதிக மாநில துணைச் செயலாளராக நீடிப்பார் என்றும் சொல்கிறார்கள்.

click me!