ரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும் பிறகு பார்க்கிறேன்...!! மல்லுக்கட்ட தயாரான பிரேமலதா...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 27, 2020, 2:32 PM IST
Highlights

அதேநேரத்தில் இந்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதைத் தட்டிக் கேட்கும் முதல் கட்சியாக தேமுதிக இருக்கும் என்றார்.   மற்ற கட்சித் தலைவர்களுக்கெல்லாம் முன் உதாரணமாக நம் தலைவர் விஜயகாந்த் திகழ்கிறார் .  

முதலில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கட்டும் பிறகு ரஜினி கட்சியால்  தேமுதிகவுக்கு பாதிப இல்லையா என்பதை பார்ப்போம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் காட்டமாக கூறியுள்ளார் . அதேநேரத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளார் , பிரேமலதாவின் இப்பேச்சு  அவரது கட்சித் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது .தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார் .  அப்போது பேசிய அவர் ,  மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டத்தை தேமுதிக ஆதரிக்கிறது ,  ஆனால் இச்சட்டம் குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை ,  ஆகவே இந்த சட்டத்தால் என்ன நடக்கும் ,  அதனால் ஏற்படும் பாதிப்பு என்ன என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றார். 

அதேநேரத்தில் இந்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதைத் தட்டிக் கேட்கும் முதல் கட்சியாக தேமுதிக இருக்கும் என்றார். மற்ற கட்சித் தலைவர்களுக்கெல்லாம் முன் உதாரணமாக நம் தலைவர் விஜயகாந்த் திகழ்கிறார் .  விஜயகாந்த் திரைப்படங்களின் மூலம் சம்பாதித்த பணத்தை மக்களுக்கு வாரி வழங்குகிறார் .  ஏழைகளுக்கு தானமாக கொடுக்கிறார் என்பதே இதற்கு சாட்சி . எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கு  தேமுதிக தொண்டர்கள் இப்போதே தயாராகி விட்டார்கள் .  தேர்தல் பிரசாரத்திற்கு விஜயகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க உள்ளார்.  அவர் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார் .  நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்டோம் எதிர்வரும் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தனித்துப் போட்டி என்பதை  இப்போதைக்கு சொல்ல முடியாது அதற்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது என்றார். 

ரஜினி கட்சி ஆரம்பித்தால் தேமுதிகவுக்கு  பாதிப்பா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் ,  முதலில் ரஜினிகாந்த் கட்சி தொடங்கட்டும் ,  பிறகு பார்ப்போம் தேமுதிக மக்கள் செல்வாக்குள்ள கட்சி .  மக்கள் ஆதரவு எப்போதும் தேமுதிகவுக்கு  உள்ளது .  என்னைப்பொறுத்தவரையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே என் விருப்பம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார் .  வழக்கம்போல ,  கூட்டணியா.? இல்லையா என்பதை இப்போது சொல்ல முடியாது எனவும்,   ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கட்டும்  பிறகு பார்க்கலாம் என்று கூறுவிட்டு  பிறகு , அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே என் விருப்பம்  என பிரேமலதா மாற்றிமாற்றி பேசியிருப்பது தேமுதிக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது .

 

 

click me!