ரஜினிக்கு யாரோ சொல்லிக்கொடுக்குறாங்க... அவரு சொந்தமா பேசுவதில்லை... ரஜினியைக் காய்ச்சிய பிரேமலதா!

By Asianet TamilFirst Published Feb 16, 2020, 8:48 PM IST
Highlights

“முதலில் ரஜினி கட்சியைத் தொடங்கட்டும். கட்சி தொடங்குவார? மாட்டாரா? என்பதை ரஜினிதான் சொல்ல வேண்டும். இதை தமிழருவி மணியன் சொல்லக் கூடாது.  கமலாவது அரசியல் களத்துக்கு வந்துவிட்டார். ஆனால், ரஜினியோ இன்னும் களத்துக்கே வரல. தனிப்பட்ட முறையில் நாங்கள் ரஜினியின் மீது மிகுந்த  மரியாதை வைத்திருக்கிறோம். ஆனால், அரசியலில் ரஜினி எப்படி இருப்பார் என்று எதுவும் தெரியவில்லை." 
 

 நடிகர் ரஜினிக்கு யாரோ சொல்லிக் கொடுப்பதாகவும் அவர் பேசுவதெல்லாம் அவருடைய சொந்தக் கருத்து இல்லை என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
பெரியார் விவகாரத்தில் ரஜினி பேசியதை விமர்சித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். “அவரை யாரோ இயக்குகிறார்கள்” என்று அப்போது ரஜினியை விமர்சித்திருந்தார் பிரேமலதா. இந்நிலையில், “ரஜினிக்கு யாரோ சொல்லிக் கொடுக்கிறார். அவர் பேசுவது அவருடைய சொந்தக் கருத்து அல்ல” என்று ரஜினியை சீண்டியிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த். செய்தித் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு பிரேமலதா பேட்டி அளித்துள்ளார். அதில்தான் ரஜினி குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.


ரஜினியின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதில் அளிதுள்ள பிரேமலதா, “முதலில் ரஜினி கட்சியைத் தொடங்கட்டும். கட்சி தொடங்குவார? மாட்டாரா? என்பதை ரஜினிதான் சொல்ல வேண்டும். இதை தமிழருவி மணியன் சொல்லக் கூடாது.  கமலாவது அரசியல் களத்துக்கு வந்துவிட்டார். ஆனால், ரஜினியோ இன்னும் களத்துக்கே வரல. தனிப்பட்ட முறையில் நாங்கள் ரஜினியின் மீது மிகுந்த  மரியாதை வைத்திருக்கிறோம். ஆனால், அரசியலில் ரஜினி எப்படி இருப்பார் என்று எதுவும் தெரியவில்லை.

 
தற்போதுவரை அவர் சினிமா நடிகர்தான். அரசியல் என்பது சாதாரணமான விஷயம் அல்ல. அது மிகப்பெரிய சமுத்திரம். அதில் ரஜினி தன்னை எப்படி முன்னெடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ரஜினி நிறைய குழப்பம் அடைவதைப் போல தெரிகிறது. எந்த ஏழுபேர் யார் என்று கேட்கிறார். ரஜினிக்கு யாரோ சொல்லிக் கொடுப்பதைப் போலத்தான் தெரிகிறது. அதெல்லாம் அவரின் சொந்த கருத்து அல்ல” என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். 

click me!