
கோயம்பேட்டில் உள்ள பா.ஜ.க. தேர்தல் அலுவலகத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் மாநில நிர்வாகிகளுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதில் தேர்தல் அறிக்கை இறுதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பா.ஜ.க.விற்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், ‘’தே.மு.தி.க. விலகியதால் கூட்டணிக்கு பாதிப்பு இல்லை. பா.ஜ.க. அங்கம் வகிக்கும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். பா.ஜ.க.விற்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டதால் தேசிய தலைமை விரைவில் அந்த பட்டியலை வெளியிடும். கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகியதால் கூடுதல் இடங்களை பா.ஜ.க. பெறுவது கூறித்து பா.ஜ.க.வின் தேசிய தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்’’ என அவர் தெரிவித்தார்.