#BREAKING தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு முக்கியத்துவம்.. அமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.!

By vinoth kumarFirst Published Mar 10, 2021, 10:04 AM IST
Highlights

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்டமாக 15 வேட்பாளர்களை அமமுக வெளியிடப்பட்டுள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட பி.பழனியப்பன், ரெங்கசாமி, பார்த்திபன், முருகன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்டமாக 15 வேட்பாளர்களை அமமுக வெளியிடப்பட்டுள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட பி.பழனியப்பன், ரெங்கசாமி, பார்த்திபன், முருகன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 12-ம் தேதி தொடங்குகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2ம் தேதி வெளியாகிறது. தேர்தலுக்கு இன்னும் குறைந்த  நாட்களே உள்ளதால் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை வேட்பாளர் தேர்தவில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், அமமுகவில்  முதற்கட்டமாக 15 வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். 

அமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் விவரம்;- 

*  பாப்பிரெட்டிப்பட்டி - முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்

*  ராசிபுரம்(தளி) -  எஸ்.அன்பழகன்

*  பாபநாசம் எம்.ரெங்கசாமி

*  சைதாப்பேட்டை  ஜி.செந்தமிழன்

*  ஸ்ரீரங்கம் R.மனோகரன்

*  மடத்துக்குளம் சி.சண்முகவேலு

*  திருப்பத்தூர்(சிவகங்கை) கே.கே.உமாதேவன்

*  சோளிங்கர்  என்.ஜி.பார்த்திபன்

*  வீரபாண்டி  எஸ்.கே.செல்வம்

*  உசிலம்பட்டி ஐ.மகேந்திரன்

*  கோவை தெற்கு   ஆர்.துரைசாமி(எ) சாலஞ்சர்துரை

*  அரூர்   ஆர்.ஆர்.முருகன்

*  பொள்ளாச்சி   கே.சுகுமார்

*  தருமபுரி   டி.கே.ராஜேந்திரன்

*  புவனகிரி  கே.எஸ்.கே. பாலமுருகன்

click me!