விஜயகாந்த் பற்றிய உண்மைகளை வெளியிட்ட தேமுதிக முன்னாள் எம்எல்ஏ..?? சமூக வலைதளத்தில் வைரல்...!!

Published : Oct 14, 2019, 07:39 AM IST
விஜயகாந்த் பற்றிய உண்மைகளை வெளியிட்ட தேமுதிக முன்னாள் எம்எல்ஏ..?? சமூக வலைதளத்தில் வைரல்...!!

சுருக்கம்

எனக்கும் ஒரு தலைவன் இருக்கிறார்...அவருக்கு... குட்கா,சிகரெட் தொழிற்சாலைகள் இல்லை, ஊழல் வழக்கு இல்லை, சாராய ஆலை...  மூன்று பொண்டாட்டிகள் இல்லை...லஞ்சம் வாங்கிய புகார் இல்லை,  நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு இல்லை, சொல்லும் செயலும் வேறு இல்லை, இந்துவாக இருந்தாலும் இஸ்லாமிய, கிறித்தவ மக்களிடம் வாக்குக்காக நடித்ததில்லை,

காமராஜர்,, அண்ணா,  எம்ஜிஆருக்கு மாற்றாக ஒரு தலைவர் இருக்கிறார் என்றால் அது தங்கள் தலைவர் கேப்டன் விஜயகாந்துதான் என தேமுதிகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பார்த்த சாரதி அதிரடியாக கருத்து வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பதவிட்டுள்ள கருத்தின் முழு விவரம். 

எனக்கும் ஒரு தலைவன் இருக்கிறார்... அவருக்கு... குட்கா,சிகரெட் தொழிற்சாலைகள் இல்லை, ஊழல் வழக்கு இல்லை, சாராய ஆலை... 
மூன்று பொண்டாட்டிகள் இல்லை...லஞ்சம் வாங்கிய புகார் இல்லை,  நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு இல்லை, சொல்லும் செயலும் வேறு இல்லை, இந்துவாக இருந்தாலும் இஸ்லாமிய, கிறித்தவ மக்களிடம் வாக்குக்காக நடித்ததில்லை, பிரிவினையை மக்களிடம் விதைக்காமல் இந்தியனாக, தமிழனாக உணர்வுகளை மக்களிடம் விதைத்தவர், ஈழத்தின் மீது அதிக பாசம் கொண்டிருந்தாலும், ஒரு நாளும் அதை வைத்து அரசியல் ஆதாயம் பெறவில்லை,கருணாநிதி, ஜெயலலிதா என இரண்டு தலைவர்களையும் அவர்கள் உயிரோடு இருக்கும்போது பெயர் சொல்லி பேசிய ஒரே ஆளுமை கேப்டன் மட்டுமே...

ஊடகங்களை அனுசரித்து போகும் தலைவர்கள் மத்தியில்,அவர்களை காரித்துப்பிய ஒற்றை மாவீரன்...40 வருடங்களில் அவரிடம் அதிமுக,திமுக,காங்கிரஸ் தொண்டர்களும் உதவி பெற்று இருக்கின்றனர்...காமராஜருக்கு மாற்று இல்லை அண்ணாவுக்கு மாற்று இல்லை எம்ஜிஆருக்கு மாற்று இல்லை என ஒவ்வொருவரும் நினைப்பர், ஆனால்  இவர்கள் அத்தனை பேருக்கும் மாற்று, வெள்ளந்தி உள்ளம் கொண்ட தலைவர் கேப்டன் மட்டுமே... என் தலைவனைப் பற்றி நான் சொல்லியதை, ஒருத்தன் வந்து எங்கள் தலைவன் இப்படி என பதில் சொல்லத் தெம்பு இருக்கா என அவர் பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?