இதையெல்லாமா.? மோடியின் காலடியில் வைத்தார் எடப்பாடி...?? கேட்டகவே திகிலாக இருக்கிறது...!! வேல்முருகன் கிளப்பிய பகீர் புகார்...!!

By Ezhilarasan BabuFirst Published Oct 14, 2019, 7:11 AM IST
Highlights

அஸ்சாம், பீகார், மேற்கு வங்கம், போன்ற வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் அந்தந்த மாநிலத்திற்காக பவன் அமைத்து, ஆயிரக்கணக்கான வட நாட்டு தொழிலாளர்களை தமிழ்நாட்டில் குடியமர்த்தி வருகின்றனர். இப்போது தமிழகத்தில், அவர்களுக்கு  வாக்குரிமை,  நிலவுரிமை, என அனைத்திலும் உரிமை பெற்று வருகின்றனர். அதனால் இங்கு  தமிழர்களுடைய வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்தும் பறிக்கப்பட்டுவருகிறது.

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை ஒரு தமிழர் ஆட்சி என்றே ஏற்றுக்கொள்ள முடியாது,  தமிழர்களின் உரிமைகளை மத்தியரசின் காலடியில் அடகு வைக்கும் அவரை  எப்படி தமிழர் என்று ஏற்க முடியும்.? என தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 

தமிழகத்தை  ஆண்ட கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய மூவருமே  தமிழர்கள் அல்ல, வேற்று மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள்.  இனி தமிழகத்தை ஒரு தமிழர் மட்டுமே ஆளவேண்டும் என்பது.  நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தமிழ் அமைப்புகளின்  வாதமாக உள்ளது.  இந்நிலையில் தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனிடம்,  தமிழகத்தை தற்போது ஆளும்  எடப்பாடி பழனிச்சாமி தமிழர்தானே,  இந்த ஆட்சி தமிழர் ஆட்சிதானே.? என்று கேள்வி எழுப்ப, அதற்கு அவர்,  எடப்பாடி பழனிச்சாமி ஒரு தமிழர் என்று சொன்னாலும்கூட தமிழகத்தின் வாழ்வுரிமை, இயற்கை வளம், மொழி, கல்வி உரிமை, என அனைத்தையும் மத்திய அரசின் காலடிகளில் அடமானம் வைத்து ஆட்சி நடத்துகிறார் அவர்,  தமிழர் நலன்களுக்கு எதிராக இருப்பவரை எப்படி தமிழர் என்று ஏற்றுக்கொள்ள முடியும் எங்களைப் பொறுத்தவரையில் அவர் தமிழரே இல்லை என்றுதான் சொல்லுவோம் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.

அஸ்சாம், பீகார், மேற்கு வங்கம், போன்ற வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் அந்தந்த மாநிலத்திற்காக பவன் அமைத்து, ஆயிரக்கணக்கான வட நாட்டு தொழிலாளர்களை தமிழ்நாட்டில் குடியமர்த்தி வருகின்றனர். இப்போது தமிழகத்தில், அவர்களுக்கு  வாக்குரிமை,  நிலவுரிமை, என அனைத்திலும் உரிமை பெற்று வருகின்றனர். அதனால் இங்கு  தமிழர்களுடைய வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்தும் பறிக்கப்பட்டுவருகிறது.  தங்கம் முதல் முந்திரி வணிகம் வரை அனைத்தும் வடமாநிலத்தவர்களின்  கைக்கு போய் சேர்ந்துவிட்டது.  இங்கு எந்தத் தொழிலை எடுத்தாலும் அதில் வடமாநிலத்தவர்கள் ஆதிக்கம் செய்கின்றனர்.  தமிழ்சமூகத்தில் நாடார்களிடம் மட்டுமே ஓரளவுக்கு  வணிகம் உள்ளது , அதுவும் பறிபோகும் அபாயம் உள்ளது.

 

தமிழர்களுடைய தங்கம் வணிகம் முதல் அதன் விலை நிர்ணயம்வரை அனைத்தையும் மார்வாடிகளே முடிவு செய்கின்றனர். அனைத்தும் இப்போதும் அவர்களின் கைக்கு போய்விட்டது.  ஆனால் அதற்கெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன.  என்று கேள்வி எழுப்பும் வேல்முருகன். தமிழர்கள் உரிமைக்காக தமிழ் மக்கள் நலன் சார்ந்த கொள்கை முடிவு எடுக்கக்கூடிய தங்களைப் போன்ற இளைஞர்களுக்கு முதலமைச்சர் என்ற வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆக மொத்தத்தில் எடப்பாடி பழனிச்சாமி தமிழராக இருந்தாலும் கூட அவர் தமிழர் நலன் சார்ந்த முதலமைச்சராக இல்லை என்பதே வேல் முருகன் போன்றோரின்  குற்றச்சாட்டாக உள்ளது.

click me!