தேர்தல் களத்திற்குள் புகுந்த ‘கொரோனா’... பிரபல அரசியல்வாதிக்கு தொற்று உறுதி... அதிர்ச்சியில் தொண்டர்கள்!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 20, 2021, 7:04 PM IST
Highlights

தற்போது தேமுதிகவின் துணைச் செயலாளரான எல்.கே.சுதீஷூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சட்டமன்ற தேர்தல் வேறு அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுக்கூட்டம், பிரசாரம் என மக்கள் அதிகம் குவிந்து வருவதாலும், மாஸ்க் அணியாமல் அலட்சியம் காட்டுவதும் தொற்றை அதிகரிக்கும் காரணிகளாக அமைந்ததாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கவலை தெரிவித்திருந்தார். 

இதனிடையே இரு தினங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் சந்தோஷ் பாபுவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஐபிஎஸ் அதிகாரியான சந்தோஷ் பாபு விருப்ப ஓய்வு பெற்று, சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். கட்சியின் தலைமை நிலைய பொதுச் செயலாளராக உள்ள அவர், ம.நீ.ம கட்சியின் வேளச்சேரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தொற்று உறுதியானது. 

தற்போது தேமுதிகவின் துணைச் செயலாளரான எல்.கே.சுதீஷூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது. கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து சுதீஷுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட சுதீஷ், நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எல்.கே.சுதீஷ் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், அக்கட்சியின் முக்கிய பேச்சாளராகவும், வாக்கு சேகரிப்பிற்காக பரப்புரையில் ஈடுபடவும் திட்டமிட்டிருந்த நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டது தேமுதிக தொண்டர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. 

click me!