தேமுதிகவின் 60 வேட்பாளர்கள் பட்டியல்... விருத்தச்சாலத்தில் பிரேமலதா போட்டி...!

By Asianet Tamil  |  First Published Mar 14, 2021, 9:30 PM IST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
 


அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக, அக்கூட்டணியில் 23 தொகுதிகளை எதிர்பார்த்தது. ஆனால், எதிர்பார்த்த தொகுதிகளை ஒதுக்காததால், கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியது. இதனையடுத்து தேமுதிக தனித்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. அந்தப் பேச்சுவார்த்தையில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திடப்பட்டது.
இதனையடுத்து தொகுதி பங்கீடு முடிந்த நிலையில், தேமுதிக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, விருத்தாச்சலம் தொகுதியில் அக்கட்சியின் பொருளாளர் பிரமேலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். விருகம்பாக்கம் தொகுதியில் தேமுதிக துணைப் செயலாளர் பார்த்தசாரதி போட்டியிடுகிறார். விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கபப்ட்ட அக்கட்சி பொதுச்செயலாளர் விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடவில்லை. அதேபோல எல்.கே.சுதிஷ், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ஆகியோரும் தேர்தலில் போட்டியிடவில்லை.


 

Tap to resize

Latest Videos

click me!