நீங்க சொல்றத நம்ப முடியல.. ஏன் அந்த பெண் நிருபரின் கன்னத்தை தட்டுனீங்க? கேப்டனின் கேள்வியால் அலறும் ஆளுனர் மாளிகை

First Published Apr 19, 2018, 5:36 PM IST
Highlights
DMDK Leader Vijayakanth statements against banwarilal brohit


4 கல்லூரி மாணவிகளை சில பெரிய மனிதர்களுக்கு பாலியல் ரீதியாக படுக்கைக்கு அனுப்ப வற்புறுத்தி தொலைபேசியில் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய உரையாடல் வாட்ஸ் அப்பில் வெளியானதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்திடம் 4 மாணவிகள் புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் நிர்மலா தேவியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளது.  மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பேராசிரியை நிர்மலா கைது செய்யப்பட்டார்.

19நிமிட உரையாடலை நொடிக்கு அலசி ஆராய்ந்துள்ளனர். விடிய விடிய நடந்த விசாரணையில் முதலில் நிர்மலாதேவி மாணவிகளிடம் பேசிய ஆடியோவை நொடிக்கு நொடி தவாராமல் கேட்டனர்.

நிர்மலாதேவியிடம், அவர் பேசிய ஆடியோவிளிருந்தே கேள்விகளை துருவித் துருவி கேட்டுள்ளனர். மாணவிகளிடம் பேசும்போது, 110 பேர் அங்கு செயல்படுகிறார்கள், என்னைப்போல் 400 பேர் இதற்காக செயல்படுகிறார்கள், ஆளுநர் மீட்டிங்கில் நான் அருகில் சென்று வீடியோ பிடிக்கும் அளவுக்கு எனக்கு செல்வாக்கு இருக்கிறது உங்களுக்கு தெரியும் என தனக்கு எவ்வளவு கெத்து இருக்கிறது என்று பேசியிருந்தார்.

“விஐபி பேரைக்கேட்டாலே நீங்களே தானா வந்துடுவீங்க” நொடிக்கு நொடி நீங்கள் அட்ஜெஸ்ட் செய்தால் போதும் நான் பார்த்துகொள்கிறேன் என  பேசியிருந்தார் மாணவிகள் மறுத்தபோது தமக்கு ஆளுநர் லெவலில் ஆளு இருக்கு என பேசியிருந்தார். இப்படி ஒரு பெண் மாணவிகளிடம் சொல்கிறார் என்றால் ஒரு பெரும் கிரிமினல் வலைப்பின்னலாகத் தெரிகிறது. பேராசிரியை ஒருவர், பாலியல் தரகர் நிலைக்கு இறங்கி, மாணவிகளுக்குப் பாலியல் வலை வீசியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. இதனால் ஆளுநர் பன்வாரிளார் புரோஹித் உடனே செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது,‘‘எனக்கு 78 வயதாகி விட்டது. எனக்கு பேரன்-பேத்திகள் மட்டுமின்றி, கொள்ளுப் பேரன்களும் உள்ளனர், நான் இதுவரை நிர்மலாதேவியை நேரில் பார்த்ததே இல்லை  என பதிலளித்து சுயபச்சாதாபம் தேடும் முயற்சியில் ஆளுனர் ஈடுபட்டது, எதற்காக இந்த நாடகம்? என அரசியல் கட்சித்தலைவர்கள் கேள்விஎழுப்பியிருந்தனர்.

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசுகையில், பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், நிர்மலாதேவி அவ்வளவு தைரியமாக செயல்பட்டதன் மூலம் உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பின்னணியில் இருக்கிறார்கள் என சந்தேகிக்கத் தோன்றுகிறது. 

ஆளுநர் தாமாகவே முன்வந்து நிர்மலா தேவியை பார்த்ததில்லை என்பது, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற பழமொழியை நினைவூட்டுவதாகவும், பத்திரிக்கையாளர் சந்திப்பில் பெண் நிருபரின் கன்னத்தை ஆளுநர் தொட்டது அநாகரிகத்தின் உச்சகட்டம் என்றும் மத்திய அரசின் ஆதரவில் உள்ள ஆளுநரே சந்தேக வளையத்துக்குள் இருப்பதால் நீதிமன்றம் தாமாக முன்வந்து நேர்மையான அதிகாரிகள் மூலம் விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 

ஏற்கனவே நிர்மலா விவகாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய ஆளுநர் பன்வாரிலால்  தற்போது பெண் பத்திரிகையாளர்கள் அவரது கன்னத்தை தட்டிக்கொடுத்தார். இந்த விவகாரம் பூதாகரமானதால் தற்போது கேப்டனும் கேள்வி அம்புகளால் ஆளுனரை துளைத்தெடுததுள்ளார்.

click me!