ஆட்டத்தை ஆரம்பித்த டிடிவி.தினகரன்... அதிர்ச்சியில் பிரேமலதா...!

Published : Jun 19, 2019, 04:45 PM ISTUpdated : Jun 19, 2019, 04:47 PM IST
ஆட்டத்தை ஆரம்பித்த டிடிவி.தினகரன்... அதிர்ச்சியில் பிரேமலதா...!

சுருக்கம்

மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகு அமமுகவில் இருந்து விலகி அதிமுக கட்சியில் நிர்வாகிகள் இணைந்து வந்தனர். இதனால், டிடிவி.தினகரன் சற்று மன வருத்தத்துடன் இருந்து வந்தார். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட தேமுதிக செயலாளர் சந்திரன் தனது ஆதரவாளர்களுடன் தேமுதிகவில் இருந்து விலகி நேற்று முன்தினம் டிடிவி.தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தனர். இது தேமுதிக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகு அமமுகவில் இருந்து விலகி அதிமுக கட்சியில் நிர்வாகிகள் இணைந்து வந்தனர். இதனால், டிடிவி.தினகரன் சற்று மன வருத்தத்துடன் இருந்து வந்தார். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட தேமுதிக செயலாளர் சந்திரன் தனது ஆதரவாளர்களுடன் தேமுதிகவில் இருந்து விலகி நேற்று முன்தினம் டிடிவி.தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார். இது தேமுதிக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த மக்களவை தேர்தலின் போது தொண்டர்களின் எதிர்ப்பையும் மீறி தேமுதிக பிரேமலதாவின் விருப்பத்தின் பேரில் அதிமுக, பாஜக கூட்டணியில் இடம்பெற்றது. ஆனால் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தேமுதிக நிர்வாகிகள் பிரேமலதாவை சந்தித்து அதிமுக கூட்டணி வேண்டாம் என கோரிக்கை வைத்தனர். 

ஆனால் சமீபத்தில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, உள்ளாட்சித் தேர்தல் உள்பட இனிவரும் தேர்தல்களில் அதிமுக, பாஜக கட்சிகளுடனான கூட்டணி தொடரும் என்று தெரிவித்திருந்தார். இதனால், தேமுதிக நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்து வந்தனர். 

இதனையடுத்து கிருஷ்ணகிரி தேமுதிக மாவட்டச் செயலாளர் சந்திரன் தனது ஆதரவாளர்களோடு தினகரனைச் சந்தித்து அமமுகவில் இணைந்தார். அவருடன் தேமுதிகவைச் சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் என பலரும் இணைந்தனர். அப்போது முன்னாள் அமைச்சரும் அமமுக தலைமை நிலைய செயலாளருமான பழனியப்பனும் உடனிருந்தார். இதனையடுத்து, மக்களவை மற்றும் இடைத்தேர்தல் தோல்வியில் இருந்து மீண்டு வந்துள்ள டிடிவி.தினகரன் இனி அவரது ஆட்டத்தை ஆரம்பிக்க உள்ளார்.

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!