மொதல்ல எத்தனை தொகுதி சொல்லுங்க... பேச்சுவார்த்தையெல்லாம் அப்புறம்தான்... தேமுதிமுவால் அதிர்ந்து போன எடப்பாடி..!

By vinoth kumarFirst Published Feb 20, 2019, 3:53 PM IST
Highlights

மக்களவை தேர்தலில் அதிமுக-தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்குவதில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எத்தனை தொகுதிகள் என தெரிவித்தப்பின் பேச்சுவார்த்தைக்கு அழைக்குமாறு அதிமுகவுக்கு தேமுதிக நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. 

மக்களவை தேர்தலில் அதிமுக -தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்குவதில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எத்தனை தொகுதிகள் என தெரிவித்தப்பின் பேச்சுவார்த்தைக்கு அழைக்குமாறு அதிமுகவுக்கு தேமுதிக நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. 

மெகா கூட்டணி கனவோடு தமிழகத்தில் வலம் வரும் பா.ஜ.க முடிந்த அளவிற்கு தமிழகத்தில் கூடுதல் இடங்களை பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் உள்ளது. இதனால் தான் தங்களுக்கு 5 தொகுதிகளாக இருந்தாலும் பரவாயில்லை பாமக கூட்டணிக்கு வர வேண்டும் என்று விட்டுக் கொடுத்ததாக கூறுகிறார்கள். ஆனால் பா.ம.கவை போல் தே.மு.தி.கவை கூட்டணிக்குள் கொண்டு வருவது அவ்வளவு சுலபமாக இல்லை. 

எப்போதுமே தே.மு.தி.க கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை வெளிப்படையாக வைத்துக் கொள்ளாது. தங்களுக்கான நோக்கங்கள் நிறைவேறும் வரை ரகசியமாகவே இருக்க விரும்புவார்கள். அந்த வகையில் பா.ம.க., பா.ஜ.க கூட்டணியை உறுதிப்படுத்தினாலும் கூட கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுவதை கூட வெளியிடாமல் அமைதி காக்கிறது தே.மு.தி.க தரப்பு. 

துவக்கத்தில் 11 தொகுதிகள் என்று ஆரம்பித்த தே.மு.தி.க தற்போது பா.ம.கவிற்கு 7 தொகுதிகள் என்றதும் 9 தொகுதிகளுக்கு இறங்கி வந்துள்ளதாக கூறுகிறார்கள். பா.ம.கவிற்கே 7 தொகுதிகள் என்றால் அவர்களை விட எங்களுக்கு கூடுதல் தொகுதி வேண்டும் என்பது தான் பிரேமலதாவின் விடாப்பிடியாக இருந்து வருகிறார். 

இதனிடையே கூட்டணிக்கான கதவை சாத்திவிடக்கூடாது என்பதற்காக பியூஸ் கோயல் நேற்று விஜயகாந்த் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பரஸ்பரம் நலம் விசாரித்துவிட்டு கூட்டணி குறித்து பியூஸ் கோயல் பேசியுள்ளார். அப்போது 9 தொகுதிகளுக்கு குறைவாக ஒரு தொகுதியை கூட வாங்கிக் கொள்ளமாட்டோம் என்று கூறி பியூஸ் கோயலையே பிரேமலதா அதிர வைத்துள்ளார். இதனால் தொடர்ந்து பேச முடியாமல் பியூஸ் கோயல் திரும்பினார்.

 

இந்நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை பிற்பகலில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் எத்தனை தொகுதிகள் என தெரிவித்த பின் பேச்சுவார்த்தைக்கு அழைக்குமாறு அதிமுகவுக்கு தேமுதிக நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக-தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்குவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதனிடையே பாஜக கூட்டணியில் கேட்ட தொகுதிகள் கிடைக்காத நிலையில், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலுடன் தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தொலைபேசியில் ஆலோசனை நடத்தி வருகிறார். 

click me!