ப.சிதம்பரத்தை திஹார் சிறையில் தள்ளிய இந்திராணி முகர்ஜிக்கு விவகாரத்து

By Selvanayagam PFirst Published Oct 4, 2019, 9:11 AM IST
Highlights

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை திஹார் சிறையில் அடைக்க காரணமாக இருந்த இந்திராணி முகர்ஜிக்கு குடும்ப நல நீதிமன்றம் விவகாரத்து வழங்கியது.

ஐ.என்.எக்ஸ். மீடியாவின் தலைமை பொறுப்பில் இருந்தவர்கள் பீட்டர் முகர்ஜியும் அவரது மனைவி இந்திராணியும். கடந்த 2012ம் ஆண்டில் இந்திராணிக்கும் அவரது முன்னாள் கணவருக்கும் பிறந்த மகளான ஷீனா போரா படுகொலை செய்யப்பட்டார். 

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் 2015ல் ஷீனா போரா படுகொலை வழக்கில் இந்திராணிக்கும், பீட்டர் முகர்ஜிக்கும் தொடர்பு இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

மகளை கொலை செய்ததாக இந்திராணி மீதும், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக பீட்டர் முகர்ஜி மீதும் போலீசார் குற்றச்சாட்டு பதிவு செய்தனர். இதனையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 

தற்போது கொலை வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே கடந்த ஆண்டு செப்டம்பரில் சிறையில் இருக்கும் இந்திராணியும், பீட்டர் முகர்ஜியும் பரஸ்பர சம்மத்துடன் விவகாரத்து கேட்டு மும்பை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

இந்த வழக்கை விசாரித்து வந்த குடும்ப நல நீதிமன்றம் நேற்று இந்திராணிக்கும், பீட்டர் முகர்ஜிக்கும் விவகாரத்து வழங்கியது. இதனையடுத்து அவர்களது 17 ஆண்டு கால திருமண உறவு நேற்று முடிவுக்கு வந்தது.

ஐ.என்.எக்ஸ். ஊழல் வழக்கில் அப்ரூவராகி இந்திராணி கொடுத்த வாக்குமூலம்தான் தற்போது ப.சிதம்பரம் திஹார் சிறையில் இருக்க காரணம். அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெறுவதற்காக, ப.சிதம்பரம் சொல்லியதால்தான் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு பணம் கொடுத்ததாக சி.பி.ஐ.யிடம் இந்திராணி வாக்குமூலம் கொடுத்து இருந்தார். அதனை ஆதாரமாக வைத்துதான் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் அலேக்காக தூக்கினர்.
 

click me!