நேற்று அண்ணாமலை கைகளால் விருது; இன்று அரசால் விலங்கு - உமா கார்க்கிக்காக குரல் கொடுக்கும் பாஜக

By Velmurugan s  |  First Published Jun 20, 2023, 2:47 PM IST

நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கையால் விருது வழங்கப்பட்ட நிலையில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக உமா கார்க்கி இன்று  கோவை சைபர் கிரைம்  காவல்துறையினர் கைது செய்து இருப்பதாக கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தமராமசாமி தெரிவித்துள்ளார்.
 


கோவை சிங்காநல்லூர் சிவா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் உமா கார்த்திகேயன் என்பவர் ட்விட்டரில்  உமா கார்க்கி26  என்ற பெயரில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இரு மதங்களுக்கு இடையே மோதல் ஏற்படுத்தும் வகையிலும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் குறித்து தொடர்ந்து ட்விட்டரில் அவதூறு பரப்புவதாக திமுகவினர்  உமா கார்க்கி மீது புகார் அளித்தனர். 

இதையடுத்து, உமா கார்க்கியை இன்று காலை அவரது வீட்டில் கோவை சைபர்கிரைம் போலீசார் கைது  செய்தனர். கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Videos

காங்கிரஸ் - திமுக கூட்டணியில் நடிகர் விஜய்யை இணைக்க தயார் - எம்.பி. விஜய் வசந்த் பேட்டி

நேற்று மாலை பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் மக்கள் சந்திப்பு பேரியக்கம் மற்றும் சமூக ஊடக செயல் வீரர் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறந்த செயல்பாட்டாளர் என உமா கார்கிக்கு  அண்ணாமலை விருது வழங்கி பாராட்டினார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விருது வழங்கிய சில மணி நேரங்களிலேயே உமா கார்கி கைது செய்யப்பட்டார். 

தகவல் அறிந்த பாஜக நிர்வாகிகள் கோவை சைபர் கிரைம்  அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது பேட்டியளித்த பா.ஜ.க மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, ''பாஜக ஆதரவாளரான உமா கார்த்திகேயனை கைது செய்திருப்பது  வன்மையாக கண்டிக்கத்தக்கது. சிறப்பாக செயல்பட்டதற்கு நேற்று மாலைதான் உமா கார்த்திகேயனுக்கு நாங்கள் விருது வழங்கி இருந்தோம். இதை தாங்க முடியாமல் பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். இதுபோல் திமுகவினர் மீது ஏராளமான வழக்குகள் போட வேண்டும். கலைஞரைப் பற்றி, பெரியாரைப் பற்றி பேசியதை திமுகவினர் நிரூபிக்க வேண்டும். 

காங்கிரஸ் - திமுக கூட்டணியில் நடிகர் விஜய்யை இணைக்க தயார் - எம்.பி. விஜய் வசந்த் பேட்டி

திமுகவினரைப் போல படுத்து உருண்டு கைதாகவில்லை. பெண்ணாக இருந்தாலும் துணிச்சலாக கைதாகி இருக்கிறார். இந்த துணிச்சல் திமுக அமைச்சருக்கு இல்லை. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. கண்டிப்பாக நாங்கள் எதிர்வினை ஆற்றுவோம். பாஜகவின் உறுப்பினர் இல்லை உமா கார்த்திகேயன். ஆதரவாளர் மட்டுமே. சட்டரீதியாக அவரது கைதை எதிர்கொள்வோம்'' என்றார். 

கோவை வடக்கு மாவட்ட திமுக ஐ.டி. விங் ஒருங்கிணைப்பாளர் ஹரிஷ் அப்போது உடன் இருந்தார்.

click me!