ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அந்த அமைப்பின் சார்பில் தமிழக காவல்துறை டிஜிபி மொத்தம் தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தமிழக காவல்துறை அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: எங்க கிட்ட உதவியை வாங்கிக்கொண்டு விசுவாசத்தை சீனாவுக்கு காட்டுவீங்களா.. இலங்கைக்கு எதிராக கொதிக்கும் ராமதாஸ்.!
undefined
அந்த வழக்கு விசாரணையில் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும்படி பல்வேறு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் செப்டம்பர் 22-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதையும் படியுங்கள்: ஜெ.மரண அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அறிக்கைக்கு பயந்து ஓடுகிறார் இபிஎஸ்.. அசிங்கபடுத்திய துரைமுருகன்
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது திருமாவளன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதநல்லிணக்கம் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை என்பதால் மறுபரிசீலனை கோர உரிமை உள்ளதாக வாதிட்டார். அதேபோல் அணிவகுப்புக்கு அனுமதி கோரியது உரிமையில் பிரச்சினை என்பதால், உரிய நீதிபதி முன்பு பட்டியலிட்டு விசாரிக்கப்பட்டு இருக்க வேண்டும், மாறாக குற்றவியல் வழக்காக அதை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது சரியல்ல எனவே இந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் காவல் கண்காணிப்பாளரையோ, காவல் ஆணையரையோ எதிர் மனுதாரராக சேர்ப்பதால் மட்டும் உரிமையியல் வழக்கை குற்றவியல் வழக்காக கருத முடியாது என்றும் அவர் வாதிட்டார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதி இளந்திரையன் திருமாவளவன் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். மேலும் இதில் தீர்ப்பளித்த நீதிபதி இளந்திரையன் கடந்த செப்டம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய முடியாது என மறுத்து திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.