வினியோகஸ்தர்களையே காப்பாற்ற முடியல... தமிழகத்தையா காப்பாற்ற போறீங்க..? ரஜினியை மறைமுகமாக சாடிய டி. ராஜேந்தர்!

By Asianet TamilFirst Published Feb 8, 2020, 10:52 PM IST
Highlights

தர்பார் படத்தை அதிக தொகை கொடுத்து வினியோகஸ்தர்கள் வாங்கி இருக்கக் கூடாது. பொங்கலுக்கு 4 நாட்களுக்கு முன்பே படம் வெளியாகிவிட்டதால், அது பொங்கல் அன்று பழைய படமாகிவிட்டது. அதுமட்டுமல்ல, ‘தர்பார்’ படம் டப்பிங் படம் போலாகி ஆகிவிட்டது. 

படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களையே காப்பாற்ற முடியாதவர்கள் தமிழகத்தைக் காப்பாற்ற போகிறார்களா என்று நடிகர் ரஜினிகாந்தை இயக்குநரும் வினியோகஸ்தர் சங்கத் தலைவருமான  டி.ராஜேந்தர் மறைமுகமாக விமர்சனம் செய்தார்.


ரஜினி நடிப்பில் வெளியான ‘தர்பார்’ படம் பொங்கல் திரு நாளையொட்டி வெளியானது.  இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸை நிரப்பியதாக தகவல்கள் வெளியாயின. ஆனால், ‘தர்பார்’ படத்தை அதிக தொகை கொடுத்து வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் நஷ்டமடைந்துவிட்டதாகக் கூறினர். தங்கள் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று  நடிகர் ரஜினி, இயக்குநர் முருகதாஸ், லைகா நிறுவனத்தை வினியோகஸ்தர்கள் முறையிட்டனர். மேலும் விநியோகஸ்தர்கள் சங்கத்திலும் புகார் கூறினர். ஆனால், இயக்குநர் முருகதாஸ், வினியோகஸ்தர்கள் மீது போலீஸில் புகார் கொடுத்தார். இதனால், இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது..
இந்நிலையில், ‘தர்பார்’ பட நஷ்டம் தொடர்பாக விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தர்பார் படத்தை அதிக தொகை கொடுத்து வினியோகஸ்தர்கள் வாங்கி இருக்கக் கூடாது. பொங்கலுக்கு 4 நாட்களுக்கு முன்பே படம் வெளியாகிவிட்டதால், அது பொங்கல் அன்று பழைய படமாகிவிட்டது. அதுமட்டுமல்ல, ‘தர்பார்’ படம் டப்பிங் படம் போலாகி ஆகிவிட்டது. படத்தில் தமிழை தவிர இந்தியையே பெரும்பாலானோர் பேசுகின்றனர் என விநியோகஸ்தர்கள் புலம்ம்பினர்.


தற்போது விநியோகஸ்தர்கள் மீது வழக்கு தொடுத்துள்ள இயக்குநர் முருகதாஸை மூத்த இயக்குநர் என்ற முறையில் நான் கேட்கிறேன். உங்களுக்கென தனியாக சங்கம் உள்ளது. முதலில் அங்கு புகார் அளிக்காமல் போலீஸையும் நீதிமன்றத்தையும் ஏன் நாடினீர்கள்? உண்மையில் படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது விநியோகஸ்தர்கள்தானே. விநியோகஸ்தர்கள் உங்களைப் பார்க்க வந்தபோது முகமூடி அணிந்து கத்தியை எடுத்துக்கொண்டா வந்தார்கள்? விநியோகஸ்தர்கள் ‘தர்பார்’ படம் தொடர்பாக பொய்க் கணக்கு காட்டுகிறார்கள் எனப் பேசுகிறார்கள். நாங்கள் கணக்கு காட்டத் தயார், நீங்கள் தயாரா?  ‘தர்பார்’ படத்துக்கு பிறகு முன்பு இவ்வளவு சம்பளமா வாங்கிய நீங்கள், அடுத்த படத்தில் உங்களால் வாங்கமுடியுமா? 


படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களையே காப்பாற்ற முடியாதவர்கள் தமிழகத்தைக் காப்பாற்ற போகிறார்கள்?” ரஜினிகாந்ந்தையும்  டி.ராஜேந்தர் மறைமுகமாக தாக்கி பேசினார்.

click me!