இயக்குநர் ப.ரஞ்சித் அடிப்பொடிகளின் சாதி வெறி... மட்டமானவர்களின் செயல்களை மன்னித்தருள்க மக்களே...!

Published : Jun 11, 2019, 03:17 PM ISTUpdated : Jun 11, 2019, 03:19 PM IST
இயக்குநர் ப.ரஞ்சித் அடிப்பொடிகளின் சாதி வெறி... மட்டமானவர்களின் செயல்களை மன்னித்தருள்க மக்களே...!

சுருக்கம்

ப.ரஞ்சித்தின் ஜாதி வெறி, இன வெறி மற்றும் மத வெறி பேச்சுக்களின் சர்ச்சை ஓயாத நிலையில், தற்போது அவரது வசனகர்த்தாவும் அவரை போன்றே ஜாதி வெறி கருத்துக்களை பரப்பி வருவது தமிழ் திரையுலகமே இப்படி ஜாதி வெறியர்களின் கையில் சிக்கி கொண்டு விட்டதோ என்ற கேள்வியை எழுப்புகிறது. 

ராஜராஜ சோழனை இழிவுபடுத்தி பேசியதாக இயக்குநர் ப.ரஞ்சித் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது அடிப்பொடிகள் சாதி வெறியை தூண்டும் அளவுக்கு கருத்துக்களை பதிவிட்டு தமிழகத்தில் மோதலை தூண்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  
 
சமீபத்தில் இயக்குனர் ப.ராஞ்சித் ஒரு மேடையில் பேசும்போது, ’’மன்னர் ராஜராஜசோழன்தான் மக்களிடம் உள்ள நிலத்தை அபகரித்தவர். அவரது ஆட்சியிலிருந்துதான்  ஜாதி பிழவு கட்டமைக்கப்பட்டது. தேவதாசி முறை அவர்கள் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. தற்போது ராஜராஜ சோழன் எங்களின் ஜாதிக்காரர் என்று 8 ஜாதிக்காரர்கள் சண்டையிட்டு கொள்கிறார்கள். ராஜராஜ சோழன் ஆட்சிதான் இருப்பதிலேயே இருண்ட ஆட்சி என்று நான் சொல்வேன்” என்றார். இவரின் இந்த பேச்சிற்கு பல தரப்புகளில் இருந்து விமர்சனம் எழுந்து வருகின்றன. சமூக வலைதளத்தில் ரஞ்சித்தின் இப்பேச்சு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.  

இந்நிலையில் அவர் மீது 3 பிரிவுகளின்  கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  சாதி, மத, இன, மொழி தொடர்பான விரோத உணர்வை தூண்டுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பா.ரஞ்சித் இயக்கி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் காலா. இதில் எழுத்தாளராக பணியாற்றியவர் மகிழ்நன். அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்ட ஜாதியினரை ஆபாசமாக கொச்சைப்படுத்தி பதிவிட்டுள்ளார். அதில், ‘ மன்னர்களுக்கு நெருக்கமாக இருந்த சாதிகள் செய்த குலத்தொழில் அதாவது Job என்ன? எனக் கேள்வி கேட்டு அவரே Blowjob ‘’ என பதிலளித்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. Blowjob என்பது மிகவும் மட்டமான வார்த்தை. அருவறுக்கத்தகுந்த வார்த்தை. 

இவர் காலா படத்தில் வசனகர்த்தாவாக இருந்துள்ளார். அதற்கு முன்னர், நியூஸ்-7 தமிழ் மற்றும் புதிய தலைமுறை தொலைக் காட்சிகளில் பணி புரிந்தவர். இதனை அடுத்து, சமூக வலைத்தளங்களில் மகிழ்நனின் ஜாதி வெறியை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ப.ரஞ்சித்தின் ஜாதி வெறி, இன வெறி மற்றும் மத வெறி பேச்சுக்களின் சர்ச்சை ஓயாத நிலையில், தற்போது அவரது வசனகர்த்தாவும் அவரை போன்றே ஜாதி வெறி கருத்துக்களை பரப்பி வருவது தமிழ் திரையுலகமே இப்படி ஜாதி வெறியர்களின் கையில் சிக்கி கொண்டு விட்டதோ என்ற கேள்வியை எழுப்புகிறது.

 

இயக்குநர் ப.ரஞ்சித் தலித் இனத்தை சார்ந்தவர்களை மட்டுமே உடன் வைத்து கொண்டு மட்டமாக பிற சாதிகள் மீது வன்மத்தை விதைக்கும் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவர்களது கருத்துக்கள் பிறருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது. 

PREV
click me!

Recommended Stories

தமிழகம் அயோத்தியாக மாற வேண்டும் என்பதே பாஜக விருப்பம்..! இயக்குநர் பா.ரஞ்சித் குற்றச்சாட்டு!
பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கு மேலே பவருக்கு வந்த அசிம் முனீர்..! டம்மியாக்கப்பட்ட ஷாபாஸ் ஹெரீப்..!