நாங்குநேரியை நாங்களே பார்த்துக்கிறோம்... காங்கிரஸ் கட்சியை வெறுப்பேற்றும் உதயநிதி..!

By vinoth kumarFirst Published Jun 11, 2019, 3:16 PM IST
Highlights

நாங்குநேரி சட்டமன்றத் இடைத்தேர்தல் தொகுதியில் திமுக போட்டியிட காங்கிரஸ் கட்சி விட்டுக்கொடுக்குமாறு உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாங்குநேரி சட்டமன்றத் இடைத்தேர்தல் தொகுதியில் திமுக போட்டியிட காங்கிரஸ் கட்சி விட்டுக்கொடுக்குமாறு உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நேற்று இரவு திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், உதயநிதி ஸ்டாலின் மற்றும் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 

இந்த கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கருணாநிதியின் பேரன், தலைவர் ஸ்டாலினின் மகன் என்பதை விட திமுகவின் கடைக்கோடி தொண்டன் என அழைக்கப்படுதையே நான் பெருமையாக கருதுகிறேன். கடந்த சட்டமன்ற தேர்தலில் எனது நண்பன் மகே‌‌ஷ் பொய்யாமொழிக்காக திருவெறும்பூர் தொகுதியில் மட்டும் பிரசாரம் செய்தேன். இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தேன். தி.மு.க.வில் பதவி, பொறுப்பு எதிர்பார்த்து நான் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. 

தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வர் பதவியில் அமர வைப்பதே எனது முக்கியமான வேலை என்றார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை மட்டும் வீசவில்லை. தலைவர் மு.க.ஸ்டாலினின் ஆதரவு அலையும் வீசியது. அதனால் தான் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள காங்கிரஸ் கட்சியினருக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். இடைத்தேர்தல் நடைபெற உள்ள நாங்குநேரி சட்டமன்ற தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்குங்கள்’’ என கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

click me!