வைகோ கட்சி... பாமக எல்லாம் அம்மா இல்லைனா வளர்ந்திருக்குமா... சரவெடி கொளுத்தும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்..!

By Asianet TamilFirst Published Feb 21, 2019, 11:34 AM IST
Highlights

ஜெயலலிதா இருந்த போது பா.ம.க. 1998, 2009-ல் கூட்டணி வைத்திருந்தபோது தோல்வி ஏற்பட்டதாக தி.மு.க. கூறுகின்றனர். ஆனால் வைகோ, பா.ம.க ஆகிய கட்சிகளின் சின்னங்களுக்கு அங்கீகாரம் தந்தவரே ஜெயலலிதாதான். இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

பாமக சின்னத்துக்கு அங்கீகாரம் பெற்றுக் கொடுத்தது யார் என்பது பற்றி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரப்பரப்பாகப் பேசினார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டதால், அரசியல் கட்சிகள் அதற்காகத் தயாராகி வருகின்றன. தேர்தலையொட்டி மதுரை மாவட்டம் மேலூர் தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: ஜெயலலிதா இறந்து இரண்டரை ஆண்டுகள் தொடர்ச்சியாக அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. 

அ.தி.மு.க.வுடன் அகில இந்திய கட்சியான பா.ஜ.க இன்று கூட்டணி அமைத்திருக்கிறது. பா.ம.க.வும் கூட்டணிக்கு வந்துள்ளது. எல்லோரிடத்திலும் திறமையான பிரதமர் என பெயர்பெற்ற மோடி, அ.தி.மு.க.விடம் கூட்டணி வைப்பது என்பது சாதாரண விஷயமல்ல. வட மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் சில இடங்களில் வெற்றி பெற்றவுடனே, கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்தார்.

 

ஆனால், மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி நடத்திய பொதுக் கூட்டத்தில் ஸ்டாலினால் அதை சொல்ல முடிந்ததா? அரசியல் ஆண்மை இருந்தால் அங்கே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் ஏன் சொல்லவில்லை. ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். பணத்திற்காக ராமதாஸ் அ.தி.மு.க.வுடன் விலை போய்விட்டார் என ஸ்டாலின் பேசுகிறார். 

தி.மு.க.வுடன் கூட்டணி என்றால் கொள்கையா? அ.தி.மு.க. என்றால் பணமா? மக்கள் சக்தி அ.தி.மு.க.விடமே உள்ளது என்று பா.ம.க முடிவு செய்துள்ளது. ஜெயலலிதா இருந்த போது பா.ம.க. 1998, 2009-ல் கூட்டணி வைத்திருந்தபோது தோல்வி ஏற்பட்டதாக தி.மு.க. கூறுகின்றனர். ஆனால் வைகோ, பா.ம.க ஆகிய கட்சிகளின் சின்னங்களுக்கு அங்கீகாரம் தந்தவரே ஜெயலலிதாதான். இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

click me!