’’சசிகலாவை அப்புறம் பார்த்துக்கலாம்... டி.டி.வி மட்டும்தான் டார்கெட்...’’ திண்டுக்கல் சீனிவாசன் தடாலடி..!

By Thiraviaraj RMFirst Published Feb 11, 2019, 9:41 AM IST
Highlights

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவருக்கும் மீண்டும் இடம் உண்டு. டி.டி.வி.தினகரனை தவிர யார் வந்தாலும் கட்சியில் சேர்க்கப்படுவார்கள் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவருக்கும் மீண்டும் இடம் உண்டு. டி.டி.வி.தினகரனை தவிர யார் வந்தாலும் கட்சியில் சேர்க்கப்படுவார்கள் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அமமுக நிர்வாகிகள் யார் வந்தாலும் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவார்கள் என அதிமுக அமைச்சர்களும், நிர்வாகிகளும் மேடைதோறும் அழைப்பு விடுத்து வருகிறார்கள். இந்நிலையில், வனத்துறை அமைச்சர் சீனிவாசன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ‘’ மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்தவுடன் உடனடியாக அறிவிக்கப்படும். அமமுகவில் இருக்கும் டி.டி.வி.தினகரனை தவிர வேறு யார் வந்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். சசிகலா சிறையில் இருந்து வந்தால் அது குறித்து பார்க்கலாம்.

சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற வேண்டும் என ஒருவரும், மாற்ற வேண்டாம் என ஒருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுகுறித்து நிபுணர் குழு அமைத்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும். 

கஜா புயலால் மலைப்பகுதியில் விழுந்துள்ள மரங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மன்னவனூர் கிராமத்தில் உள்ள பரப்பாறு அணை சீரமைப்பது குறித்து மாவட்ட கலெக்டரும், மாவட்ட வன அதிகாரியும் பேசி முடிவு எடுப்பார்கள்’’ என அவர் தெரிவித்தார். 

click me!