அதிமுக என்ற சினிமா ஓடிக்கொண்டிருக்கிறது… சட்டசபையில் தான் கிளைமாக்ஸ் ….ஜாலி பேட்டியளித்த திண்டுக்கல் சீனிவாசன்….

Asianet News Tamil  
Published : Aug 27, 2017, 09:50 AM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
அதிமுக என்ற சினிமா ஓடிக்கொண்டிருக்கிறது… சட்டசபையில் தான் கிளைமாக்ஸ் ….ஜாலி பேட்டியளித்த திண்டுக்கல் சீனிவாசன்….

சுருக்கம்

dindigul seenivasan press meet

தமிழகத்தில் தற்போது  அதிமுக என்ற சினிமா ஓடிக்கொண்டிருக்கிறது என்றும்,  சட்டமன்றத்தில் தான் கிளைமேக்ஸ் நடைபெற உள்ளது என்றும்  அமைச்சா் திண்டுக்கல் சீனிவான் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் எம்ஜிஆரின்  பிறந்தநாள் நூற்றாண்டு விழா அரசு சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் தொடங்கிய நூற்றாண்டு விழா தொடா்ந்து விழுப்புரம், அரியலூா் மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக வருகிற செப்டம்பா் மாதம் 20ம் தேதி நாகை மாவட்டத்தில் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா அரசு சார்பில் கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி நாகையில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் நூற்றாண்டு விழா தொடா்பான மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது. ஓட்டப்பந்தயத்தை அமைச்சா்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ். மணியன், காமராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனா்.

இதைத் தொடர்ந்து  செய்தியாளா்களை சந்தித்த அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன்  , தமிழகத்தில் தற்போது சிறப்பான முறையில் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழக சட்டப் பேரவையில் விரைவில் கிளைமேக்ஸ் நடைபெறும் என்று கிண்டலாக தெரிவித்தார்.

அப்போது தான் தினகரனுக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளிக்கின்றனா் என்று அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியார்  வெளியிடும் கருத்தே அ.தி.மு.க.வின் உண்மையான கருத்து என்றும் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

ஒபிஎஸ்ஸின் ஒரே நம்பிக்கையும் போச்சு.. விஜய்யுடன் கை கோர்த்த அதிமுக முன்னாள் அமைச்சர்!
ஊழல் கறை என் நிழலிலும் படாது.. ஊழல் செய்யவும் விட மாட்டேன்.. மேடையில் சபதம் எடுத்த விஜய்!