புதுச்சேரி சொகுசு விடுதிக்கு வந்து சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் … தினகரன் ஆதரவு உறுப்பினர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு….

 
Published : Aug 27, 2017, 08:22 AM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
புதுச்சேரி சொகுசு விடுதிக்கு வந்து சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் … தினகரன் ஆதரவு உறுப்பினர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு….

சுருக்கம்

ttv support 2 mla came to puducherry Hotel

புதுச்சேரியில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் தங்கியுள்ள சொகுசு விதிக்கு  மேலும் 2 எம்எல்ஏக்களும் வந்து சேர்த்தால் எடப்படி பழனிசாமிக்கு எதிரான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் இணைந்ததையடுத்து, சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டும், பதவியை விட்டும் நீக்க நடவடிக்கை எடுத்தப்படும் என எம்.பி. வைத்தியலிங்கம் தெரிவித்தார்.,

இதனால் ஆத்திரமடைந்த  டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தனர்.

இதையடுத்து 19 எம்எல்ஏக்களும், புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ. கலைச்செல்வன் ஆகியோர்  திடீரென டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு கரம் நீட்டினர்.

இதையடுத்து அவர்கள் 2 பேரும் நேற்று காலை புதுச்சேரி வந்தனர். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கி உள்ள ஓட்டலுக்கு சென்ற அவர்களை அங்கு தங்கி இருந்த மற்ற எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர். பின்னர் அவர்கள் 2 பேருக்கும் தனியாக அறைகள் ஒதுக்கி கொடுக்கப்பட்டன.

2 எம்.எல்.ஏ.க்கள் தற்போது புதிதாக வந்து இருப்பதால் டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எம்.ஏ.க்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. இதையொட்டி அந்த ஓட்டலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே 21 எம்எல்ஏக்கள் தற்போது தங்கியுள்ள சன்வே சொகுசு விடுதியில் இருந்தது மீண்டும் விண்ட் ப்ளவர்  ரிசார்ட்சுக்கு மாற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அந்த சொகுசு விடுதியில் 21 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 

 

 

 

PREV
click me!

Recommended Stories

இந்த மூன்று நாடுகளின் ஜனாதிபதிகளைக் கொல்ல துடிக்கும் அமெரிக்கா..? டிரம்பின் சதித் திட்டம்..!
அப்போ எல்லாமே வதந்தி தானா.. போட்டி போட்டு மறுத்த டிடிவி தினகரன், தமிழிசை.. என்ன விஷயம்?