
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், மற்ற மாநில முதல்வர்களை அழைப்பீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, எம்ஜிஆரை அவமானப்படுத்தும் விதமாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசியலில்50 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சியவர் எம்ஜிஆர். 1950 களில் இருந்து ஆட்சியை பிடிக்கும் வரை திரைத்துறையில், ‘நம்பர் 1’ இடத்தில் இருந்தவர் எம்ஜிஆ.ர். 1967ல் திமுக ஆட்சியை பிடிப்பதற்கு, முக்கிய காரணகர்த்தாவாகவும், 69ல் கருணாநிதி முதலமைச்சராக பதவியை பிடிக்க முக்கிய காரணகர்த்தாவாகவும், 1971 பொது தேர்தலில், இந்திரா காங்கிரஸ் – திமுக கூட்டணி இமாலய வெற்றி பெற முக்கிய காரணமாகவும் விளங்கியவர் எம்ஜிஆர்.
1962 சீன யுத்தம் ஆகட்டும், 1972 பாகிஸ்தான் யுத்தம் ஆகட்டும் அனைத்து நிகழ்வுகளிலும் இந்திய அளவில் தன்னுடைய பங்களிப்பை செலுத்தி நிதி வசூலித்து கொடுப்பது, போர் முனையில் இருந்த ராணுவத்தினருக்கு உற்சாக மூட்டியது அன்றைய பிரதமர்கள் நேரு மற்றும் இந்திராவின் அன்பை பெற்றார்.
தேசிய அரசியலில், நேரு, இந்திரா, ராஜாஜி, முரார்ஜி தேசாய், ராஜிவ் காந்தி என பலரிடமும் நெருக்கம் காட்டியவர் எம்ஜிஆர். இந்தியாவில் நடிகர் ஒருவர் ஆட்சியை பிடித்தது, எம்ஜிஆர் என்ற வகையில், இந்தியா முழுவதும் புகழ் பெற்றார்.
எம்ஜிஆரை பின்பற்றி அப்போதைய திரைத்துறை நடிகர் என்டி.ராமாராவும் ஆந்திராவில் ஆட்சியை பிடித்தார். இவ்வாறு அகில இந்திய அளவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பிரபலமான மனிதராக விளங்கியவர் எம்ஜிஆர்.
எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய பின்னர், 10 ஆண்டுகள் கழித்து, எம்ஜிஆரால் அடையாளம் காட்டப்பட்டு அதிமுகவை தலைமையேற்று நட்த்தியவர் ஜெயல்லிதா. இவர்களால் அடையாளம் காட்டப்பட்ட 3வது, 4வது கட்ட தலைவர்கள் தற்போது அதிமுகவின் தலைவர்களாக தொலைக்காட்சி கேமராமுன் வலம் வருகின்றனர்.
இவர்களில் ஒருவர்தான் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். அடிக்கடிகாமெடியாக பேசி, நகைப்புக்குறியவராக மாறி வரும் திண்டுக்கல் சீனிவாசன், தன்னை ஆளாக்கியவரை இந்தியவில் யாருக்கு தெரியும் என பேசியது, அதிமுக தொண்டர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்ஜிஆர் நுாற்றாண்டு விழா வரும் ஜனவரி மாதம் வரை தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இதற்கான முதல் விழா மதுரையில் ஜூன் 30ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான கால்கோள் விழா நேற்று நடந்தது.
அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு உள்பட 12 அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர். சட்டமன்றத்தில் நடைபெறும்மானிய கோரிக்கை விவாதத்தால், இரவோடு இரவாக வந்த அமைச்சர்கள் அனைவரும் உடனடியாக சென்னை திரும்பினர்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கான கால்கோள் நிகழ்ச்சி நடப்பதை அறிந்தத்தும்,ஏராளமான பத்திரிகையாளர்கள் அங்கு திரண்டனர். அப்போது, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், மற்ற மாநில முதலமைச்சர்களை அழைப்பீர்களா என கேட்டனர்.
அதற்கு, “ மற்ற மாநில முதலமைச்சர்களில் யாருக்கு எம்ஜிஆரை தெரியும்,'' என கூறினார். இதை கேட்டதும், அங்கிருந்த அனைவரும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இதை பார்த்து சுதாரித்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், ''சென்னையில் நடக்கும் விழாவில் அனைத்து மாநில முதல்வர்களையும் அழைப்போம்,''என கூறி சமாளித்தார்.
மூத்த அமைச்சராக வலம் வரும் திண்டுக்கல் சீனிவாசன், எம்ஜிஆர் காலத்திலேயே அரசியல்வாதியாக இருந்தவர். எம்ஜிஆரை வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியாது என செய்தியாளர்களிடம் பேசியதால், அவரது ஆதரவாளர்களே அதிருப்தி அடைந்துள்ளனர்.