
35 வருட உயிர் தோழியான சசிகலாவை அதிமுக எனும் கட்சியிலோ அல்லது தமிழக அரசின் ஆட்சி அதிகாரத்திலோ எந்த வகையிலும் நுழைய விட கூடாது என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருந்தது தெரிய வந்துள்ளது.
ஜெ மறைவுக்கு பிறகு முதலமைச்சர் ஆக்கப்பட்டவர் ஓபிஎஸ். அவரது போக்கு பிடிக்காததால் பதவியிலிருந்து சசிகலாவால் வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டார்.
இதனால் மனம் நொந்து போன ஓபிஎஸ் ஜெ. சமாதியில் மறந்து பிரளயத்தை கிளப்பி கட்சியை இரண்டாக்கினார்.
அதோடு நின்று விடாமல் தொடர்ந்து சசிகலாவிற்கும் அவரது குடும்பத்துக்கும் தொடர்ந்து குடைச்சலும் கொடுத்து வருகிறார்.
ஓபிஎஸ் கொடுத்த குடைச்சலில் அதிமுக என்னும் கட்சியே இரண்டாகி போனதோடு இரட்டை இலை சின்னமும் இல்லாமல் போனது.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியா டுடே ஆங்கில தொலைகாட்சிக்கு ஓபிஎஸ் பேட்டி அளித்துள்ளார்.
இதில் பிரதமர் மோடி, ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஓபிஎஸ் பேட்டியில் ஹைலைட்டாக ஜெயலலிதா தன்னிடம் பல தருணங்களில் தனது தோழியான சசிகலாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ எக்காரணத்தை கொண்டும் எப்போதும் கட்சிக்குள் அதிகாரம் செலுத்துவதை அனுமதிக்க கூடாது என தன்னிடம் தெரிவித்துள்ளதாக ஓபிஎஸ் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே ஓபிஎஸ் இபிஎஸ் அணிகளுக்கு இடையேயான இணைப்பு முயற்சியில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வரும் நிலையில் ஓபிஎஸ்சின் பேட்டி மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.