
அதிமுகவில் பொருளாளராக இருந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் எவ்வளவு கொள்ளையடித்தார் என திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன் டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம், தற்போது பொருளாளராக உள்ள திண்டுக்கல் சீனிவாசன், கோடி கணக்கில் சுருட்டுவதாக செய்தியாளர்களிடம் கூறினார். அதற்கு, இதே பதவில் இருந்த ஓ.பி.எஸ். எவ்வளவு கொள்ளையடித்தார் என செய்தியாளர்களிடம் திண்டுக்கல் சீனிவசாசன் கூறினார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டி:-
அதிமுக பொது செயலாளர் சசிகலா என்னை, கட்சியின் பொருளாளராக நியமித்தார். அன்று முதல் நான், எனது பணியை நியாயமாக செய்து வருகிறேன். சட்டப்படி கணக்கு வழக்குகளையும், வரவு மற்றும் செலவுகளையு பார்த்து வருகிறேன். இதில் எந்த குளறுபடியும் நடக்கவில்லை.
நான் பல கோடி சுருட்டியதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார். நான் கடந்த சில மாதங்களாக இந்த பொறுப்பில் இருக்கிறேன். நானே பல கோடி சுருட்டினேன் என கூறும் அவர், பல ஆண்டுகளாக பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் எத்தனை கோடியை கொள்ளையடித்தார் என்பதை ஒப்பு கொள்ளவேண்டும்.
எங்களிடம் 123 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். அதனால், நாங்கள் பலமாக இருக்கிறோம். ஆனால், ஓபிஎஸ் அணியிடம் 2 சதவீதம் எம்எல்ஏக்கள் இருக்கிறார்களா என்பது சந்தேகம்தான்.
தமிழக அரசியலில், ரஜினியும் களம் இறங்குவதை நான் வரவேற்கிறேன். ஆனால், ஆட்சியில் எவ்வித பலனும் இல்லை. ஊழல் அதிகரித்து இருக்கிறது என்பதை ஏற்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.