ஜெ.,வின் 14 வீடியோக்கள்! எப்போது ரிலீஸ்? சசி மறுத்தாலும், வெளியிட அடம்பிடிக்கும் தினா!

 
Published : Dec 29, 2017, 12:31 PM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
ஜெ.,வின் 14 வீடியோக்கள்! எப்போது ரிலீஸ்? சசி மறுத்தாலும், வெளியிட அடம்பிடிக்கும் தினா!

சுருக்கம்

dinakaran will be soon release 14 videos

ஆர்.கே.நகரில் அமோக வெற்றிபெற்ற தினகரன், சித்தியிடம் ஆசீர்வாதம் வாங்க பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்று சசிகலாவைச் சந்தித்து வந்திருக்கிறார். வெளியே காத்திருந்த செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் வெற்றி பெற்றதற்காக சசிகலாவிடம் ஆசி பெற்றதாகவும், தியாகதலைவி சின்னம்மா மௌனவிரதத்தில் இருப்பதாகவும் கூறினார்.

ஆனால் அங்கு நடந்ததே வேறு, தினகரனி வெற்றி செய்தியை காதில் வாங்காத சசி, வெற்றிவேல் ஜெயலலிதாவின் மருத்துவமனை வீடியோ பற்றி கோபமாக இருந்தாராம்.இந்த வீடியோ எதற்காக வெளியிட்டோம், என தினகரன் சொன்னாராம்... ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் கடைசி பிரசார நாளன்று, அம்மாவைக் கொன்றவர்களுக்கா ஓட்டு என்று எடப்பாடி - பன்னீர் தரப்பு துண்டுப் பிரசுரம் அடித்து ஒட்டினார்கள். கஷ்டப்பட்டு களப்பணியாற்றி தேர்தலில் நிற்கிறோம், ஆனால் அவர்களோ சிம்பிளாக அம்மாவை கொன்றார்கள் என ஒரு வார்த்தையில் வாக்களர்களை திசைதிருக்குகிரார்கள். இதனால் தான் வாக்கு பதிவிற்கு முந்தய நாள் தன்னிடம் கேட்காமலேயே, வெற்றிவேல் எம்.எல்.ஏ. ஓர் அதிரடி அந்த வீடியோவை வெளியிட்டார்.

இந்த வீடியோ வெளியானதுக்கு எனக்கும் சம்பந்தமே இல்லை, வெற்றிவேல் தான் நம் மீது உள்ள விசுவாசத்தில் இப்படி செய்துள்ளார் என தெளிவாக கூறினாராம். அதுமட்டுமல்ல வாக்கு கேட்க செல்லும்போது ‘அம்மாவை மருத்துவமனை கொண்டுபோனதே நினைவு இல்லாமல்தான், அவரது கால்களை எடுத்துவிட்டார்கள்’ என்றெல்லாம் மதுசூதனன் சகாக்கள்  பொய் பிரச்சாரம் பண்றாங்க... இதனால் தான் வீடியோவை வெளியிட்டாராம். என சமாதான படுத்தினாராம். ஆனாலும் சசி முகம் கொடுத்து பேசவில்லையாம்.

இது ஒருபுறமிருக்க, வெற்றிவேல் வெளியிட்ட இந்த ஒருவீடியோவால் இவ்வளவு பெரிய வெற்றிபெற்ற நிலையில், தன் குடும்பத்தின் மீது இருந்த கொலைப்பழி தற்போது, நீங்கி விட்டதாகவே கருதுகிறாராம் தினா, அதுமட்டுமல்ல இந்த வீடியோவால் கடுமையாக பாதிக்கப்பட்டது எடப்பாடியும் பன்னீரும் தானாம். இந்த ஒரு வீடியோவிற்கே ஆட்டம் கண்ட ஆளும் அதிமுகவிக்கு பேதியை கிளப்பும் வகையில் இன்னும் கைவசம் இதேபோன்று சுமார் 14 வீடியோக்கள் தினகரன் வசம் இருப்பதாகவும் அவை எப்போது வேண்டுமானாலும் வெளிவரும் என்றும்  தகவல்கள் வெளியாகின்றன.

கைவசமிருக்கும்  வீடியோக்களில் ஜெயலலிதாவுக்கு சசிகலா சாப்பாடு போடுவது போலவும் ஜெயலலிதா சசிகலாவுடன் பேசிக்கொண்டிருப்பது போல எக்கச்சக்கமாக காட்சிகள் இருக்கிறதாம். இன்னும் குறிப்பாக ஜெயலலிதாவே பன்னீர், பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் ஊழல் புள்ளிகளைப் பற்றி பெயர் குறிப்பிட்டு அவர்கள் மீதான புகார்களை விரிவாகப் பேசியதும் சில வீடியோவில் பதிவாகியிருக்கிறதாம்.

சிறைக்கு செல்லும் முன்பு, விவேக்கிடம் பேசிய சசிகலா பாதுகாப்பு காரணங்களுக்காக தினகரனிடம் ஒருகாப்பியை  கொடுக்க சொன்னாராம். அவரும் அதை பாதுகாப்பாக வைத்திருந்துள்ளார். தேர்தல் சமயத்தில் வெற்றிவேலிடம் கொடுக்கப்பட்ட அந்த வீடியோக்களில் ஒன்றை மட்டும் இடைத்தேர்தல் பரிசாக வெற்றிவேல் ரிலீஸ் செய்திருக்கிறார். மீதமிருக்கும் வீடியோக்களை வெளியிட வேண்டிய கட்டாயம் வரும்போது அதை வெளியிடுவார் என தினா டீம் கேட்டாக சொல்லிவருகிறது. அப்படி வெளியிட்டால் அவர்களின் இன்னும் பல சுயரூபங்கள் ஜெயலலிதாவின் வார்த்தைகளாகவே வரும்’ என்கிறார்கள் தினகரன் வட்டாரத்தில் நடப்பவற்றை அறிந்தவர்கள். டிசம்பர் 28ஆம் தேதி சசிகலாவை சிறையில் சென்று தினகரன் சந்தித்தபோது, வெற்றிவேல் வீடியோ வெளியிட்டது பற்றி சசிகலா அதிருப்தி தெரிவித்ததாகவும் தினகரன் மீது கோபப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.

ஆனால் தினகரனோ கூலாக, “சசிகலா இப்போது சிறையில் இருக்கிறார். அதனால் அவருக்கு வெளியே நடக்கும் மூவ்மெண்ட்டுகள் பற்றி சரியான தகவல் கிடைக்கவில்லை. நமக்கு எதிராக எப்படி எப்படி அந்தர் பல்டி அடித்தார்கள். இப்போது நமக்கு காலம் வந்துவிட்டது. இனி அவர்களுக்கு நான் கொடுக்கப்போகும் ட்விஸ்ட் அவர்கள் எதிர்பார்க்கததாக இருக்கும்” என வீராப்பாக சொல்கிறாராம். ஒருவேளை சின்னம்மா சம்மதம் தெரிவிக்காத பட்சத்திலும்கூட இந்த வீடியோ வெளியீடுகள் ரிலீஸ் ஆகும் என தினகரன் சகாக்கள்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!