அரசு ‘ICU’வில் இழுத்துக்கொண்டு கவலைக்கிடமாக உள்ளது... கூல் தினா குசும்பு பதில்...

First Published Jan 9, 2018, 3:43 PM IST
Highlights
dinakaran walks out from assembly


5 அல்லது 6 எம்எல்ஏக்கள் விலகிச்சென்றால் இந்த அரசு என்ன ஆவது? வில் இழுத்துக்கொண்டு கவலைக்கிடமாக உள்ளது என சுயேச்சை MLA தினகரன் கூறியுள்ளார்.

நீக்கப்பட்ட  விவகாரம் குறித்து விவாதிக்க தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அவர் சட்டசபையிலிருந்து வெளியேறினார் சுயேச்சை MLA தினகரன்.

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டிடிவி தினகரன். இந்நிலையில் கடந்த வாரம் எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்ட நிலையில் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் முழுவதும் உள்ளே இருந்த தினகரன் ஆளுநர் உரையிலுள்ள குறைகளை அலசி ஆராய்ந்து லிஸ்ட் போட்டார்.

நானும் வெளியேறியிருப்பேன் ஆனால் சட்டசபை கூட்டத்தொடர் முதல் நாள் என்பதால் அங்கு உட்கார வேண்டியதாயிற்று ஆனது.

இந்நிலையில் இன்று சட்டசபையில் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது. குறித்து தினகரன் எழுப்பினார். அதற்கு அவருக்கு பேச சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை.

இதையடுத்து தினகரன் அவையிலிருந்து வெளிநடப்பு செய்வதாக தெரிவித்துவிட்டு வெளியே வந்துவிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து விவாதிக்க அனுமதி கேட்டேன். அதற்கு அனுமதி மறுத்தனர் என கூறினார்.

திமுகவினருடன் கூட்டு வைத்திருப்பதாக வார்த்தைக்கு வார்த்தை சொல்லுகிறார்கள். பதிலளிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை, நான் எதிர்கட்சி வரிசையில் உட்காந்துருக்கேன் அதனால் அவங்ககிட்ட பேசக்கூடாதா? மேலும், பேசிய தினகரன் இது வீட்டுக்கு போக வேண்டிய மைனாரிட்டி அரசு  திமுகவுக்காவது காங்கிரஸ் சப்போர்ட் இருந்தது. ஆனால் இந்த அரசுக்கு எந்த சப்போர்ட்டும் இல்லை அதுமட்டுமல்ல முதல்வராக இருக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு தகுதி இல்லை. எதிர்க்கட்சியினருடன் பேசினால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று பயப்படுகிறார்கள் என கூலாக பதிலளித்தார் தினகரன்.

மேலும் பேசிய அவர், இந்த அரசு மைனாரிட்டி அரசு, ஐந்து அல்லது ஆறு MLA‘க்கள் வெளியேறினார் இவர்கள் நிலைமை என்ன ஆவது? தற்போது ICU’வில் கவலைக்கிடமாக உள்ளது இந்த அரசு என கூறியுள்ளார்.

click me!