டிடிவி தினகரன் துணை பொது செயலாளர் - சசிகலா உத்தரவு

 
Published : Feb 15, 2017, 10:41 AM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
டிடிவி தினகரன் துணை பொது செயலாளர் - சசிகலா உத்தரவு

சுருக்கம்

ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து விரட்டப்பட்ட டி.டி.வி.தினகரன் , டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் கட்சியில் இணைக்கப்பட்டு உடனடியாக அவர்களுக்கு பதவியும் அளிக்கப்பட்டுள்ளது. 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி 2011 ஆ ஆண்டு சசிகலா , டி.டி.வி தினகரன், நடராஜன் , மகாதேவன், ராவணன், டாகடர் வெங்கடேஷ்  உள்ளிட்ட 13 பேர்  நீக்கப்பட்டனர். பின்னர், சசிகலா, மன்னிப்பு கடிதம் கொடுத்தார்.

அதில், தனக்கு கட்சி , ஆட்சி பதவி மீது ஆசை இல்லை , அக்காவுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்பது மட்டுமே தனது எண்ணம்  என்று கூறி இருந்தார். இந்த விலக்கத்தை ஏற்று சசிகலாவை மட்டும் ஏற்று கொள்வதாகவும் மற்றவர்கள் நீக்கம் தொடரும் என்று அறிவித்து ஜெயலலிதா சேர்த்துகொண்டார்.

 இதையடுத்து அவர்களுடன், ச்சிகலாவுக்கு எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்தது. ஆனால் சசிகலா, மறைமுகமாக அனைவரையும் தொடர்பு கொண்டு இருந்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவர் உடல் வைக்கப்பட்ட இடத்திலேயே நீக்கப்பட்ட அனைவரும் வந்து சேர்ந்துகொண்டனர்.

இதையடுத்து தமிழக முதலமைச்சராக ஒ.பன்னீர்செல்வமும், பொது செயலாளராக சசிகலாவும் பொறுப்பேற்று கொண்டனர்.

கட்சிக்குள் மீண்டும் நடராஜன் போன்றோர் கருத்து சொல்வதும். தினகரன் திவாகரன் போன்றோர் தலையிட்டதையும் கட்சிக்காரர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் ஓபிஎஸ், சசிகலா மோதல் காரணமாக சசிகலா முதல்வராக ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏக்களை கூவத்தூரில் தங்கவைத்திருந்தார்.

இந்நிலையில்  உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. இதில், சசிகலா உள்பட 3 பேருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது.

இதயடுத்து முதல்வர் பதவி ஏற்பதில் சசிகலாவுக்கு சிக்கல் ஏற்பட்டது. கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பும் நீடிக்குமா எனபதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் சசிகலா அதிரடியாக ஓபிஎஸ் உள்ளிட்ட எதிர்ப்பாளர்களை கட்சியை விட்டு நீக்கினார். எடப்படியை சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு பெற செய்தார்.

இத்தனையும் செய்தவர் கட்சி தனது குடும்ப கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் எனபதற்காக ஜெயலலிதாவின் உத்தரவை மாற்றி 2011 ல் கட்சியிலிருந்து நீக்கபட்ட டி.டி.வி. தினகரன் , டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரை கட்சியில் இணைத்தார். 

இணைத்த அன்றே டி.டி.வி தினகரனுக்கு கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் பதவியையும் வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். நேற்றே சேர்த்தல் , நியமனம் செய்ததாக அறிக்கையில் இருந்தாலும் இன்றுதான் அறிவிப்பு வெளியாகி உள்ளது.அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் படி அறிக்கையில் சசிகலா கேட்டுகொண்டுள்ளார்.

 டி.டிவி. தினகரன் சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மகன் ஆவார்  , டாக்டர் வெங்கடேஷ் அண்ணன் சுந்தரவதனத்தின் மகன் ஆவார் . இவர்கள் முறையே அதிமுகவின் பொருளாளர் மற்றும் இளைஞர் இளம்பெண்கள் பாசறை தலைவராக இருந்தவர்கள் எனபது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!