நம்ம கூட்டத்துல யாரந்த கறுப்பு ஆடு?: சிட்டி ரோபோவாக மாறும் தினகரன்...

Asianet News Tamil  
Published : Nov 19, 2017, 10:34 AM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
நம்ம கூட்டத்துல யாரந்த கறுப்பு ஆடு?: சிட்டி ரோபோவாக மாறும் தினகரன்...

சுருக்கம்

Dinakaran turns into a city robot Anyone who has a black sheep

’இந்த நாட்டுல நாங்க பார்க்காத ஜெயிலே கிடையாது. திகார் வரைக்கும் பார்த்தாச்சும், இதுக்கு மேலே என்னா பண்ணிட முடியும்.’ என்று வெளியில் வீராவேசம் பேசினாலும் கூட தினாவை உள்ளூர ஒரு கேள்வி போட்டுக் குடைந்து கொண்டிருக்கிறது. அது என்ன?...
கடந்த 10 நாட்கள் சோதனை ஜெ-சசி நட்பால் உருவான சொந்தங்கள், நண்பர்கள், சேவகர்கள் மற்றும் வாங்கப்பட்ட சொத்துக்கள் ஆகிய அத்தனையையும் வளைத்து வளைத்து ஸ்கேன் செய்து தள்ளியிருக்கிறது. எதையும், எவரையும் விட்டுவைக்கவில்லை. 

ரெய்டு துவங்கிய சில மணி நேரங்களுக்குப் பின் பேட்டி கொடுக்க துவங்கிய தினகரன் நேற்று வரை ‘எங்களை மிரட்டிப் பார்க்கும் இந்த முயற்சி மிகப்பெரிய தோல்வியில்தான் முடியுமே தவிர, எங்களை எதுவும் செய்துவிட முடியாது. அதிகபட்சம் என்ன செய்துவிடுவார்கள். 25 வருடம் ஜெயிலில் போடுவார்களா, போடட்டும் அதன் பிறகு வந்து கட்சியை நடத்துவேன். இதைத்தவிர வேறென்ன செய்துவிட முடியும்? கொலையா செய்துவிட முடியும்.’ என்று பிசிறாமல் சொல்லிக் கொண்டே இருக்கிறார். 

ஆனால் அவருக்குள் ஒரு கேள்வி மட்டும் துளைத்துக் கொண்டே இருக்கிறது. அது ‘நமது சொத்துபத்துக்கள், நட்பு வட்டாரம் ஆகியவற்றை மிக தெளிவாக வருமானவரித்துறையிடம் போட்டுக் கொடுத்தது யார்?’ என்பதுதான். அதற்கு அவரது ஆதரவு புள்ளிகள் ‘வேற யாருண்ணே, எல்லாம் எதிர் கோஷ்டிதான்.’ என்று பதில் தந்தனர். ஆனால் அதை மறுத்திருக்கிறார் தினா. 

காரணம்! ஜெயலலிதா இருந்தபோது, சசி ஜெயிலுக்குள் செல்லும் முன் இருந்த நட்புகள், சொத்துக்கள் பற்றிய விபரங்களை மட்டும் ஐ.டி. துறை தெரிந்து வைத்திருந்தால்  கூட இவை எடப்பாடி மற்றும் பன்னீர் அணியினரால் போட்டுக் கொடுக்கப்பட்டிருக்கிறது எனலாம். ஆனால் மிக சமீபத்தில் நிகழ்ந்திருக்கும் பண பரிமாற்றங்கள், ஆவண பரிமாற்றங்கள் போன்றவற்றையும் கூட ஐ.டி. துறை தெளிவாக தெரிந்து வைத்து வளைத்திருக்கிறது. 

இன்னும் சொல்லப்போனால் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சில பென் டிரைவ்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை கூட அதிகாரிகள் தெரிந்து வைத்து கேட்கிறார்கள்.

அப்படியானால் இப்போது நம்முடையை செயல்பாட்டை அறிந்திர வாய்ப்பில்லாத எதிரணியின் வேலை இல்லை இது! நம்மோடு கூடவே இருக்கும் யாரோதான் இதை செய்கிறார்கள். ஆக எடப்பாடி அணியில் நமக்காக இருக்கும் ஸ்லீப்பர் செல்கள் ஸ்லீப்பிங் செல்களாக மாறி தூங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களால் நமக்கு இம்மிளவும் பயனில்லை.

ஆனால் அவர்களுக்காக நமக்குள் இருக்கும் ஸ்லீப்பர் செல்கள் மிக சுறுசுறுப்பாக அநாயசமாக வேலை செய்கிறார்கள் என்று ஆவேசப்பட்டிருக்கிறார். 

தன் கூட்டத்தினுள் நுழைந்த டாக்டர் வசீகரனை சிட்டி ரோபோ ‘நம்ம கூட்டத்துல ஒரு கறுப்பு ஆடு நுழைஞ்சிருக்குது. ஹூ இஸ் தட் பிளாக் ஸீப்?’ என்று ஆவேச டயலாக் பேசி கண்டுபிடிப்பது போல் கண்டுபிடிக்கும் பணியில் குதித்திருக்கிறார். 
ஒரு வேளை கண்டுபிடித்தால்...மே!ம்மே!ம்மே...என கத்தப்போவது யார்?

PREV
click me!

Recommended Stories

முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்.. 'அந்த' வார்த்தையால் கண்கலங்கிய தளபதி.. இதை கவனிச்சீங்களா?
திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை.. முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்: கே.சி. வேணுகோபால்