
துணைப் பொதுச் செயலாளராக இன்று பதவியேற்கிறார் டி.டி.வி.தினகரன்..அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு…
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகுஅதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரை அதிமுக எம்எல்ஏக்கள் சட்டமன்ற குழுத் தலைவராகவும் தேர்வு செய்தனர். பின்னர் அவர் தமிழக முதலமைச்சராக பதவியேற்க இருந்தார்.
ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு சிறை தண்டனை உறுதிப்படுத்தப்பட்டதால் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சசிகலா ஜெயிலுக்கு போகும் முன்பு, கட்சி நடவடிக்கைகளை கவனித்துக் கொள்வதற்காக, டி.டி.வி.தினகரனை துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார்.மேலும் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராகவும் அடையாளம் காட்டினார்.
இதனைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிகை
கட்சியின் துணைப் பொதுச் செயலராக இருந்து, தினகரன், சசிகலாவின் விருப்பப்படி, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கி, நம்பிக்கை ஓட்டெடுப்பிலும் வெற்றி பெற வைத்தார்.
பின்னர் நேற்று முன்தினம் பெங்களூரு , சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்துவிட்டு, சென்னை திரும்பிய தினகரன், இன்று ராயப்பேட்டை அதிமுக தலைமைக் கழகத்தில், கட்சியின் துணைப் பொதுச் செயலராக பதவி ஏற்றுக் கொள்கிறார்.
பகல் 12:00 மணிக்கு நடக்கும் இந்த பதவி ஏற்பு விழாவில், தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று, கட்சியின் மாநில நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் எம்.பி.,க்கள்,எம்பிக்கள் அனைவருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச் செயலராக தேர்வு பெறுகிறவர் மட்டும்தான், பதவி ஏற்பு நிகழ்ச்சி நடத்தி, பதவியேற்றுக் கொள்வது உண்டு.கட்சியின் மற்ற எந்தப் பொறுப்புக்கும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை. வெறும் அறிவிப்பு மட்டும்தான் இருக்கும். ஆனால், தினகரனுக்கு மட்டும், புதிதாக இப்படியொரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.