ஒரே போடாய் போட்ட தினகரன்..! இப்படி ஒரு வார்த்தையை சொல்லி விட்டாரே...

Published : Nov 08, 2018, 05:59 PM IST
ஒரே போடாய் போட்ட தினகரன்..! இப்படி ஒரு வார்த்தையை சொல்லி விட்டாரே...

சுருக்கம்

சர்கார் படம் திரைக்கு வந்து இரண்டு நாட்களே ஆன நிலையில் படத்தில் இடம் பெற்று உள்ள காட்சிகள்  ஆளும் அதிமுக அரசை சுட்டிக்காட்டுவதாக உள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் சர்கார் படம் குறித்து, கருத்து தெரிவித்து வருகின்றனர் 

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு திரை அரங்குகளில், சர்கார் காட்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது. சர்கார் படம் வியாபார நோக்கில் எடுக்கப்பட்ட திரைப்படம். அரசு தரும் இலவச பொருட்கள் மக்களுக்கு தேவை இல்லை என்று நினைத்தால் அதனை முழுவதும் காண்பிக்க வேண்டுமே தவிர...இலவச கல்வி,  இலவச சைக்கிள், இலவச லேப்டாப் மட்டும் காண்பித்தால் எப்படி...?

இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டியையும், அதில் ஒட்டப்பட்டுள்ள படத்தையும் காட்ட வேண்டியதுதானே? கேள்வி எழுப்பி உள்ளார்.அரசியலில் ஆர்வம் உள்ளதை மட்டும் வெளிக்காட்டும் விஜய், தனது அரசியல் அறிவு இவ்வளவு தான் என்பதை வெளிக்காட்டி உள்ளார் என தினகரன் தெரிவித்து உள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்