ஜெராக்ஸ் எடுக்குற வேலை பார்க்கிற உனக்கெதுக்கு அமைச்சர் பதவி?: திண்டுக்கல்லாரை தூர்வாரும் தினா அணி...

First Published Nov 21, 2017, 4:31 PM IST
Highlights
Dinakaran supporters are Condemned Minister Dindukal srinivasan


தமிழக அமைச்சர்கள் சிலர் திப்பிரித்தனமாக பேசி வருவது உலக தமிழகர்கள் அறிந்த சேதி. அமைச்சரவையின் அத்தனை பேரும் இப்படியில்லை. செல்லூர் ராஜூ, உதயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் என்று ஒரு சிலர் மட்டுமே இதே பணியாக இருக்கின்றனர். இதில் ராஜூவும், உதயாவும் யாரும் நோகும் படி பேச மாட்டார்கள். ஆனால் திண்டுக்கல்லார் அப்படியில்லை பல நேரங்களில் அவரது வார்த்தைகளும், வாதங்களும் சர்ச்சைகளையும், சிக்கல்களையும் உருவாக்கி விடுகிறது. 

இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கடலோர காவல்படை தாக்கியதாக எழுந்திருக்கும் சர்ச்சையில் சீனிவாசன் சொன்ன பதில் மிக மோசமான விமர்சனத்தை கிளப்பியிருக்கிறது. 

இந்த விவகாரம் பற்றி பேசுகையில் ‘தமிழக மீனவர்களை நோக்கி சுட்டது யாரென்று தெரியவில்லை. அந்த குண்டு எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை.’ என்று சொல்லியிருந்தார் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன். இது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், 

திண்டுக்கல் சீனிவாசனும் “ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கடலோர காவல் படை தாக்கியதாக எழுந்துள்ள பிரச்னையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் நிலைப்பாடே எங்களின் கருத்து.” என்று கூறி கை கழுவிவிட்டார். 

இது பெரும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது தமிழகம் முழுக்க. அதிலும் தினகரன் அணியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் “ஒரு அமைச்சரா பொறுப்பாக திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஏதாவது ஒரு விஷயத்தில் எந்த பதிலையாவது தர முடிகிறதா? தனது நிலையறிந்து, பொறுப்பறிந்து, கடமையறிந்து எதையாவது பேசுகிறாரா?

தமிழக மீனவர்கள் மீது துளியும் அக்கறையில்லாமல், ராணுவ அமைச்சர் கூறிய கருத்தை அப்படியே காப்பியடித்து பேசுகிறாரே! ஜெராக்ஸ் எடுக்கும் வேலை பார்ப்பதற்கு எதற்கு இந்த மனிதனுக்கு அமைச்சர் பதவி? மக்களை நல்லபடியாக ஆள முடியவில்லையென்றால் ராஜினாமா செய்துவிட்டு போ!” என்று வெளுத்து வாங்கியிருக்கின்றனர் இணையதளத்தில். 
இப்போது பிரச்னை என்னவென்றால், இண்டர்நெட்டில் உங்களை இப்படி திட்டியிருக்கிறார்களே? என்று கேட்கப்போனால் ‘இன்டர்நெட் என்றால் என்ன?’ என்பதற்கு திண்டுக்கல்லார் கொடுக்கும் விளக்கத்தை நினைத்தால்தான் தலை சுற்றுகிறது. 
அவ்வ்வ்!...

click me!