தகுதி நீக்கத்திற்கு எதிராக மேல்முறையீடு இல்லை! அந்தர் பல்டி அடித்த தினகரன்! டென்சனில் Ex எம்.எல்.ஏக்கள்!

By karthikeyan VFirst Published Oct 28, 2018, 10:53 AM IST
Highlights

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாக நேற்று தங்கதமிழ்செல்வன் அறிவித்த நிலையில் இன்று தொகுதியில் மக்களை சந்தித்து தங்கள் எம்.எல்.ஏக்கள் கருத்து கேட்ட பிறகு மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தினகரன் கூறியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாக நேற்று தங்கதமிழ்செல்வன் அறிவித்த நிலையில் இன்று தொகுதியில் மக்களை சந்தித்து தங்கள் எம்.எல்.ஏக்கள் கருத்து கேட்ட பிறகு மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தினகரன் கூறியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை வியாழக்கிழமை அன்று உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. இதனை தொடர்ந்து மதுரையில் மறுநாள் அவசரமாக கூடி தினகரன் தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு தங்கதமிழ்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது சபாநாயகர் தவறு செய்துவிட்டார் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் தகுதி நீக்கத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தங்கதமிழ்செல்வன் கூறினார். மேலும் 30ந் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தங்கதமிழ்செல்வன் அறிவித்தார். இதனால் தகுதி நீக்கத்திற்கு ஆளாகி பதவி இழந்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். இந்த நிலையில் காளையார் கோவிலில் தினகரன் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய தினகரன் தங்கள் எம்.எல்.ஏக்கள் தங்கள் தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்க உள்ளதாக  கூறினார்.

மக்களிடம் கருத்து கேட்டு மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தினகரன் அப்போது தெரிவித்தார். மேலும் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் கூட தேர்தலுக்கு இடையூறு ஏற்படாமல் மேல்முறையீட்டு மனுக்களை திரும்ப பெறுவது பற்றி கூட முடிவெடுப்போம் என்றும் தினகரன் கூறினார். வெள்ளியன்று தங்கதமிழ் செல்வன் மேல்முறையீடு என்று உறுதியுடன் கூறியிருந்தார்.

ஆனால் சனிக்கிழமை பேசிய தினகரன், தொகுதி மக்களிடம் பேசி தங்கள் எம்.எல்.ஏக்கள் மேல்முறையீடு குறித்து முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மதுரையில் மீண்டும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுடன் தினகரன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தகுதி நீக்கத்திற்கு எதிராக மேல்முறையீடு இல்லை என்று அறிவித்தார்.

இதனிடையே தகுதி நீக்கத்திற்கு எதிராக மேல்முறையீடு என்று எடுத்த முடிவில் இருந்து ஒரே நாளில் தினகரன் அந்தர் பல்டி அடித்துள்ளார். இந்த விவகாரத்தில் தற்போதும் கூட தினகரன் எடுத்த முடிவு இறுதியானதா? அல்லை மாறுதலுக்கு உட்பட்டதா என்கிற டென்சன் பதவியை இழந்த எம்.எல்.ஏக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தினகரன் அணியில் தொடர்ந்து குழப்பமே நீடிக்கிறது. 

click me!