"ஜெ.வின் வேதா நிலையம் ரத்த சொந்தங்களுக்கே சொந்தம்" - திடீர் ரிவர்ஸ் கியர் போட்ட டிடிவி!!

Asianet News Tamil  
Published : Jun 13, 2017, 04:31 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
"ஜெ.வின் வேதா நிலையம் ரத்த சொந்தங்களுக்கே சொந்தம்" - திடீர் ரிவர்ஸ் கியர் போட்ட டிடிவி!!

சுருக்கம்

dinakaran says that jayalalitha house belongs to blood relations

பார்ட் டைம் பொலிடீஷியாக இருந்த டிடிவி.தினகரனை நாடி நரம்பெல்லாம் அரசியல் முறுக்கேறியவராக மாற்றியிருக்கிறது திகார் சிறைவாசம். அதிகார மட்டத்தில் மட்டுமே அறியப்பட்டவராக வந்த தினகரனை இரட்டை இலை லஞ்ச வழக்கு ஓவர் நைட்டில் ஒபாமா என்பதைப் போல பட்டி தொட்டி எல்லாம் ஹிட்டடிக்க வைத்திருக்கிறது. 

ஜாமீனில் விடுதலை ஆன பின்பு சிறை தந்த உற்சாகத்தால் ஓபனிங்களிலேயே சிக்ஸர் அடித்து எடப்பாடிக்கும் ஓ.பி.எஸ்.சுக்கும் அச்ச உணர்வை ஏற்படுத்திருக்கிறார். 60 நாட்கள் தான் கெடு... பார்த்துக்கோங்க. கட்சியில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது என்று இவர் ஏக வசனங்கள் அதிமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

முதல் பந்து சிக்ஸர் என்றால், இரண்டாவது பந்தை ஸ்டேடியம் தாண்டி அடித்து ஹிட்டடித்திருக்கிறார் டிடிவி. ஜெயலலிதா வசித்து வந்த வேதா இல்லம், அவரது ரத்த சொந்தமான தீபக், தீபா ஆகியோருக்கு சொந்தம் என்பதே இந்த இரண்டாவது பந்து. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.டி.வி. தினகரன் , " ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு தீபா வந்து சென்றதும், அவரை யார் அழைத்து வந்தார் என்பதும் எனக்குத் தெரியாது. செய்திகளில் பார்த்துதான் அங்கு என்ன நடந்தது என்பதை நான் அறிந்தேன்.

ஜெயலலிதாவின் வீடான வேதா நிலையம் அமைந்துள்ள போயஸ் தோட்டம் எங்களுக்கு கோவில் போன்றது. ஜெயலலிதா நம் அனைவருக்கும் தெய்வம் போன்றவர். அவரது சொத்தை எடுத்து கொள்வதற்கு நான் யார்? ஜெயலலிதாவின் வீட்டில் அவருடைய நேர்முக உதவியாளர் பூங்குன்றன் 40 ஆண்டுகளாக ஜெயலலிதாவுடன் இருந்த ராஜம் மற்றும் சிலரே உள்ளனர்."

"சசிகலா சிறைக்கு சென்ற பிறகு ஒரே ஒரு தடவை மட்டும் நான் அங்கு சென்று வந்தேன். நான் ஏன் அந்த சொத்தை கைப்பற்ற வேண்டும். அந்த சொத்து ரத்த வாரிகளுக்கு மட்டுமே சொந்தமானது. அப்படி இருக்க, தீபா என் மீது ஏன் புகார் தெரிவிக்கிறார் என்று தெரியவில்லை. ஜெயலலிதாவின் சட்டப் படியான வாரிசு என்பதை அவர் தெரிவித்து அந்த சொத்துக்களை எடுத்து கொள்ளலாம். இந்த விவகாரத்தில் எனக்கு எந்த பங்கும் இல்லை." டிடிவியின் இந்த திடீர் ரிவர்ஸ் கியர் எந்தப் பாதையில் செல்வதற்காக....

PREV
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!