
கட்சியில் இருந்து என்னை விலக்கியதால் எனக்கு எந்த வித வருத்தமும் இல்லை என டிடிவி.தினகரன் கூறினார்.
கடந்த 2 நாட்களாக அதிமுகவின் இரு அணிகளும் மீண்டும் இணைவதாக பரபரப்பு பேச்சு பரவி வந்தது. இதையாட்டி, டிடிவி.தினகரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது.
அதிமுக பிளவு படக்கூடாது என்பதே என்னுடைய எண்ணம். இதற்காக என்னை விலகி போக சொன்னால், நான் ஒதுங்கி போகிறேன். இதற்காக அவர்களுடன் தகராறு செய்யும் எண்ணம் எனக்கு கிடையாது.
அவர்களுக்குள் ஏதோ ஒரு பயம் வந்துவிட்டது. ஆனால், அது என்னவென்றே தெரியவில்லை. அவசர கதியில் அமைச்சர்கள் முடிவை அறிவித்துள்ளனர். என்னால், கட்சியில் எந்த காரணம் கொண்டும் பிளவு ஏற்பட கூடாது.
என்னை அதிமுகவில் இருந்து ஒதுக்கியதால், எனக்கு எவ்வித மன வருத்தமும் இல்லை. நான் கூட்டம் நடத்த இருந்தது, கட்சிக்காகவேதான் தவிர, எனது பலத்தை காண்பிக்க அல்ல.
சிலருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அந்த திடீர் அச்சத்துக்கு காரணம் தெரியவில்லை. அதனால், என்னை கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்து விட்டனர். என்னை கட்சியில் இருந்து நீக்கினால், அவர்களுக்கு நன்மை ஏற்படும் என்றால், அந்த நன்மை நடக்கட்டும்.
கடந்த 14ம் தேதி வரை வந்து என்னை சந்தித்தவர்கள் திடீரென இந்த முடிவு எடுக்க என்ன காரணம். அமைச்சர்கள் ஆலேசனைக்கு பின் மீண்டும் என்னை தொடர்பு கொள்வதாக கூறினார்கள். கடைசில், என்னை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்துவிட்டனர்.இதனால் எனக்கு வருத்தமும் இல்லை என தினகரன் தெரிவித்தார்.