“ரஜினியும், கமலும் டம்மி பீசு... எப்போதுமே நான் தான் நம்பர் 1”... ஆர்.கே.நகரில் தினகரன் அதிரடி

 
Published : Jan 22, 2018, 07:38 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
“ரஜினியும், கமலும் டம்மி பீசு... எப்போதுமே நான் தான் நம்பர் 1”... ஆர்.கே.நகரில் தினகரன் அதிரடி

சுருக்கம்

dinakaran says tha Kamal and Rajini wont make big effect in election

புதியதாக கட்சி தொடங்கவிருக்கும் ரஜினி, கமல் அரசியலுக்கு வந்தாலும் நான்தான் எப்போதுமே நம்பர் 1'' என ஆர்.கே.நகர் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசினார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளுக்கு இடையே சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 40, 000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட தினகரன் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு விசில் அடித்து சாதித்து காட்டினார்.

தினகரனின் இந்த வெற்றியின் மூலம் தமிழக அரசியல் களத்தில் புதிய தலைவராகவே தினகரன் அவதாரம் எடுத்தார். ஆர்.கே.நகரில் பெற்ற வெற்றியின் மூலம் நான் இல்லாமல் தமிழக அரசியல் களம் இல்லை என்பதை தினகரன் ஆணித்தரமாகவே உணர்த்தியது இந்த தேர்தல் முடிவு.

இந்நிலையில் இன்று மாலை அவர் வெற்றி பெற்ற ஆர்.கே நகர் பகுதிக்கு சென்று  இருக்கிறார். அப்போது அவர் ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் பிரவேசம் குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

அதில் ''ரஜினியும், கமலும் கட்சி தொடங்க போவதாக அறிவித்து இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் தேர்தலில் ஒண்ணுமே பண்ண முடியாது''

இவங்க இரண்டு பேரும் அரசியலுக்கு வருவதால் எங்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை. அவர்கள் உள்ளாட்சி தேர்தலில் எந்த மாற்றத்தையும் கொண்டு வந்துவிடப் போவதில்லை என்றார்.

மேலும் பேசிய அவர் ''உள்ளாட்சி தேர்தலில் எங்கள் பலம் தெரியும். நாங்கள் அதிமுக அம்மா அணி என்று பெயரில் செயல்பட இருக்கிறோம். புதியதாக கட்சி தொடங்கவிருக்கும் ரஜினி, கமல் அரசியலுக்கு வந்தாலும் நான்தான் எப்போதுமே நம்பர் 1'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

PREV
click me!

Recommended Stories

விடாத அஜிதா ஆக்னஸ்.. தவெக அலுவலகம் முன்பு தர்ணா.. 'விஜய் பேசாமல் நகர மாட்டேன்'.. பரபரப்பு!
விஜய் இஸ் தி ஸ்பாய்லர்..! தவெக கூட்டணிக்கு வராததால் பியூஸ் கோயல் ஆத்திரம்..!